காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (Kayalpatnam - Chennai Guidance Centre) - KCGC இன் முதலாவது பொதுக்குழு கூட்டம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ப்ரஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரி கூட்ட அரங்கில் கடந்த டிசம்பர் 11 அன்று (ஞாயிற்று கிழமை)
மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு KCGC இன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஆடிட்டர் S.S. அஹமத் ரிஃபாய் தலைமை
தாங்கினார். இக்கூட்டத்தில் சென்னையில் வாழும் காயலர்கள் பெரும்வாரியாக கலந்துக்கொண்டனர். கூட்டத்தினை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்
முஹம்மது முக்தார் நெறிப்படுத்தினார்.
துவக்கமாக இறைமறையில் இருந்து திருவசனங்களை F.அஹமத் முஹைதீன் ஓதினார்.
KCGC இன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் M.S. அப்துல் காதர் (Smart) வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து KCGC உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அவசியம், அதன் செயல்திட்டங்கள் குறித்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் S.H.
சமீமுல் இஸ்லாம் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து KCGC இன் துணைக்குழுக்களான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ குழு உறுப்பினர்கள் அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள்
குறித்து விளக்கி பேசினர்.
வேலைவாய்ப்பு குழு குறித்த விளக்க உரையினை M.N. அப்துல் காதர் (முத்து வாப்பா), கல்வி குழு குறித்த விளக்க உரையினை
வழக்கறிஞர் H.M. அஹ்மத் அப்துல் காதர் மற்றும் மருத்துவ குழு குறித்த விளக்க உரையினை மருத்துவர்கள் Z.A. முஹமது நவாஸ் மற்றும்
D.முஹமது கிஸார் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை வாழ் காயலர்கள் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்பட்டு,
முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மஃரிப் தொழுகை நேரத்தில் முதல் அமர்வு நிறைவுற்றது.
தொழுகைக்குப்பிறகு கூட்டத்தின் இரண்டாம் அமர்வு துவங்கியது. துவக்கமாக கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் சுய அறிமுகம்
நடந்தது.
அதனை தொடர்ந்து KCGC இன் நோக்கங்கள், செயல்பாடுகள் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.
பின்னர் - கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட - அமெரிக்காவில் Microsoft நிறுவனத்தில் பணிபுரியும் - குத்துக்கல் தெருவை சார்ந்த ஹைதர் அலி சிறப்புரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து கூட்டத்தின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய் உரை நிகழ்த்தினார். கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1:
KCGC இன் முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை குறித்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வழங்கியுள்ள சென்னை வாழ் காயலர்களை -
அவர்களின் இசைவினை அடிப்படையாகக் கொண்டு - உறுப்பினர்களாக சேர்த்திட தீர்மானிக்கப்பட்டது
தீர்மானம் 2:
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 29.12.2011 வியாழன் அன்று KCGC குறித்த அறிமுக நிகழ்வை நமதூரில் துளிர் கேளரங்கத்தில் வைத்து
நடத்திடுவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3:
KCGC இன் செயல்பாடுகள் நமதூரைச் சார்ந்திருப்பதன் அவசியத்தை உணர்ந்தும், நகரில் தகவல் பரிமாற்ற வசதிக்காகவும் KCGC இன் காயல்
பிரதிநிதியாக சகோதரர் N.S.E. மஹ்மூத் அவர்களை இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
KCGC இன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் குளம் முஹம்மது தம்பி நன்றியுரை கூற, துஆ கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இறுதியாக கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
கீழே உள்ள படத்தினை அழுத்தினால் - புதிய பக்கத்தில் அப்படம் பெரிய அளவில் - திறக்கும்
தகவல்:
முஹம்மது முக்தார்,
ஒருங்கிணைப்பு குழு, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC). |