காயல்பட்டினம் கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த கோமான் நற்பணி மன்றம் சார்பில், மருத்துவ ஆலோசனை இலவச முகாம், 17.12.2011 அன்று (நாளை) காலை 09.00 மணி முதல், மதியம் 01.30 மணி வரை காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் தலைமை தாங்குகிறார். கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த - தமிழ்நாடு அரசு மாநில நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் டாக்டர் ஏ.லியாக்கத் அலீ முன்னிலை வகிக்கிறார். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முகாமைத் துவக்கி வைக்கிறார்.
இம்முகாமில், பொதுநல மருத்துவர்களான
டாக்டர் எம்.ஏ.அபுல்ஹஸன்,
டாக்டர் பி.ஏ.எம்.ஜாஃபர் சாதிக்,
டாக்டர் ஃபாஸீ
ஆகியோரும்,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி,
மனநல மருத்துவர் டாக்டர் அப்துர்ரஹ்மான்,
குழந்தைகள் நலம் மற்றும் சுவாச நோய் நிபுணர் டாக்டர் சரவணன்,
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் சுந்தர்சிங்,
எலும்பு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அபுல் காஸிம்,
தோல் நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஐயம்பெருமாள்,
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அபூபக்கர்,
பல் மருத்துவ நிபுணர் டாக்டர் மஹ்மூத் சுலைமான்,
ஃபிஸியோதெரபிஸ்ட்களான டாக்டர் எஸ்.முருகேசன், டாக்டர் லெட்சுமி ப்ரியா
ஆகியோரும் கலந்துகொண்டு, மருத்துவ ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.
இம்முகாமில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு, கோமான் நற்பணி மன்றம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
ஆசிரியர் அப்துல் ரசாக்,
காயல்பட்டினம். |