பொதுவாக விழாக்களின்போது கொண்டு வரப்படும் யானைகளை, அவ்விழாக்கள் முடிந்த அடுத்த தினத்திலிருந்து, நகர்வலம் நடத்தி வசூலிக்கத் துவங்கி விடுவர் யானைப்பாகன்கள். அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தமது குழந்தைகளையும், சிறுவர்களையும் அந்த யானை மீதேற்றி இறக்கிய பின்னர், பாத்திமொன்றில் தண்ணீர் எடுத்து யானையை உறியச் செய்து, அதன் துதிக்கையால் குழந்தைகளின் முகத்தில் சிந்தச் செய்யும் வழமை தொன்றுதொட்டு உள்ளது.
அந்த அடிப்படையில், காயல்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு விழாவிற்காக வந்த யானை, நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர் தனது நகர்வலத்தைத் துவக்கியுள்ளது. இன்று காலையில், சித்தன் தெரு வழியே வந்தபோது கண்ட காட்சி:-
4. Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byabbas saibudeen (kayalpatnam)[18 December 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 14806
இந்த நியூஸ் மூலம் இது போன்றவைகள் (யானை சாணி மீது எறி மிதித்தால் உடம்பு குண்டாகும் ) என்ற மூடநம்பிக்கையில் இருந்து நாம் மீள்வூம். வல்ல ரஹ்மான் நன்மையின் பக்கம் நம் அனைவரையும் சேர்ப்பானாக .ஆமீன்
6. Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byAbu thahir tsa (chennai)[18 December 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 14810
நண்பர் ஸாலிஹ்! அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுடைய பாரபட்சமற்ற, நடுநிலையான, பயனுள்ள செய்திகளை தருகிற இந்த தளத்தை தயவு செய்து தவறான, பயனற்ற செய்திகளின் மூலம் தரமற்றதாக்கி விட வேண்டாம்.
மட்டுமன்றி "பொதுவாக கந்தூரி விழாக்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில் திருவிழாக் களுக்காக கொண்டு வரப்படும் யானைகளை" என்ற வாசகம் நீங்கள் சொல்ல வரும் செய்திக்கு அவசியம் அற்றது. தயவு செய்து அந்த வரிகளையோ அல்லது முற்றிலும் அந்த செய்தியையோ நீக்கி விடுவது நல்லது.
- அன்புடன் அபூ தாஹிர் T.S.A.
Moderator: எந்த உள்நோக்கத்துடனும் இச்செய்தி வெளியிடப்படவில்லை எனினும், உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவ்வாசகம் திருத்தப்பட்டுள்ளது.
10. Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byVilack SMA (Hong Shen , Siacun)[18 December 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 14821
செய்தி " கத்திரி " செய்யப்பட்டது என்றாலும் , என்னவென்று புரிந்து கொண்டேன் . இந்த மூட நம்பிக்கை , மற்ற ஊர்களிலும் உள்ளதா என்று தெரியவில்லை . குண்டு ஆவதற்கு பல வழிகள் உள்ளது . சாப்பிட்டு விட்டு வேலைவெட்டி இல்லாமல் உறங்கினாலும் குண்டு ஆகலாம் . விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் சொல்பவர்கள் , முதலில் இதுபோன்ற மூட நம்பிக்கை உள்ளவர்களை மீட்க முயல வேண்டும் .
11. Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[18 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14826
ஒரு வாயில்லா ஜீவனை பயன்படுத்தி பிச்சை எடுப்பதே முதல் குற்றம். அதவும் யானை ஆபத்தான விலங்கு.எனவே அதை வரவழைத்து தங்களது நிகழ்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வோர் அதன் பயன்பாடு முடிந்ததும் அதை திருப்பி கொண்டுபோகும்படி யானை உரிமையாளர்களிடம் வற்ப்புறுத்த வேண்டும். மற்றபடி சாணி மேட்டர் ரெம்பவும் சோனி மேட்டர்.
14. Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byShahul Hameed (Kayal Patnam)[18 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14834
எனக்கு ஒரு சந்தேகம்! அந்த இடத்தை குறிப்பாக நோட்டமிட்டு பலம் அடைந்து உள்ளதா என்று பார்க்க
வேண்டும். இப்போது போடப்பட்டுள்ள கழிவு தும்புக்கு
போட்டியாக இந்த சரக்கு மாற வாய்ப்பு உள்ளது.
இந்த மேட்டருக்கும் இவ்வளவு கமெண்ட்ஸ்ஸா...ரசிக்கும் படி தான் உள்ளது, அதுவும் யானையாரே பாட்டும் சூப்பர்தான். LKG பிள்ளைகள் பாட்டை மாத்தி பாடிவிடப்போகிறார்கள்..
பார்க்க பார்க்க திகட்டாத இரண்டு விசயம் யானையும், கடலும் தான். இந்த இரண்டும் மிரண்டால் அவ்வளவுதான்.
17. Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byOMER ANAS (DOHA QATAR.)[19 December 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14851
யானை வரும் பின்னே மணி யோசை வரும் முன்னே இது பழமொழி! யானை போகும் முன்னே அதன் பெரிய விட்டை விழும் பின்னே இது புது மொழி! இப்பல்லாம் உங்க தெருவாவே காட்டறீங்களே SK தம்பி என்ன விசேஷம்...?
20. நாறடிக்காதீர். posted byAnsari YentY (K S A)[19 December 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14860
இப்போது யானை.... இனி பூனையா?? பூனை மண்ணை போட்டு மூடிவிடும் முன்பே கிளிக் செய்துவிடுங்கள்.. தரமற்ற செய்தி... தவிர்த்திருக்கலாம்.. இதுபோல் செய்திகளை வெளியிட்டு இந்த வலைதளத்தையும் எங்களையும் நாறடிக்காதீர்கள்.
21. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன். posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[19 December 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14862
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு டாக்டர் அவர்களே..... யானை இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன். தரமான நியுஸ்தானே.... ?
ஒரு கரும்பிலே..... அடி கரும்பு, நடு கரும்பு, நுனி கரும்பு, அதுக்கு மேலயும் கொஞ்சம் இருக்கு அது சாப்புட்ட நாக்கு பொத்து போகும். இப்படி ஒரு கரும்பிலே.... இத்தனை விரைட்டி இருக்கும் போது..... நம்ம சைட்டையும் டாக்டர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். பேசண்டா மாறி பாருங்கோ....... டாக்டர். வஸ்ஸலாம்.
25. Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byHAMEED SIRAJUDEEN (Ponmdicherry)[21 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14922
சகோதரர்களே!
இந்த வெப் சைட்டின் - அதிக பார்வையில் - இது தான் மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. VERY GOOD! (குண்டாவது பற்றி எல்லோருமே படிக்க விரும்புகிறார்கள் - நான் உட்பட)
இந்த (யானையின் சாணம்) விஷயத்தை விட அதன் தலைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். Catching ஆன ஒரு தலைப்புக் கொடுததால், அந்த செய்தி எல்லோரையும் சென்றடையும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross