காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் தலைவரான மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள் இன்று நள்ளிரவு 02.00 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 04.30 மணியளவில் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மர்ஹூம் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா சார்பில், 19.12.2011 திங்கட்கிழமை இரவு 08.15 மணிக்கு, மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
துவக்கமாக, மர்ஹூம் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் துவங்கியது. குருவித்துறைப்பள்ளி முத்தவல்லி ஹாஜி எஸ்.எம்.கபீர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். பின்னர், ஹாமிதிய்யா பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர், மர்ஹூம் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் பேருரையாற்றினர்.
ஹாமிதிய்யா ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ என்.டி.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்ரஸா ஹாமிதிய்யாவின் திருக்குர்ஆன் மனன(ஹிஃப்ழு)ப் பிரிவு மாணவர்களும், குருவித்துறைப்பள்ளி மஹல்லாவைச் சார்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். |