காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவின் மாமனாரான - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த ஹாஜி எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் மரைக்கார், 21.12.2011 அன்று இரவு 07.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவரது உடல் மறுநாள் 22.12.2011 அன்று காலை 10.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக, காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு தாயிம்பள்ளி மையவாடிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பின்பு பள்ளிவாசலில், மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் சிறப்புத் தொழுகையை வழிநடத்தினார். பின்னர், அப்பள்ளி மையவாடியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகளில், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான, ஏ.லுக்மான், முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, ஹைரிய்யா, பதுருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கிய ஷீலா, ஜமால், அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், நகராட்சி குடிநீர் குழாய் பொருத்துனர் நிஸார் தலைமையில் அத்துறை அலுவலர் பாஸ்கர் மற்றும் ஊழியர்களும்,
தாயிம்பள்ளி நிர்வாகிகளான ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி கே.எம்.தவ்லத், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் ஹாஜா அரபி, ஜித்தா காயல் நற்பணி மன்ற செய்தித் தொடர்பாளர் ஒய்.எம்.ஸாலிஹ், அதன் செயற்குழு உறுப்பினர் அரபி ஷுஅய்ப், இக்ராஃ கல்விச் சங்க செய்தித் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், காயல்பட்டினம் நல அறக்கட்டளை செயலர் ஹாஜி ஆதம் சுல்தான், அதன் துணைச் செயலர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உள்ளிட்டோரும்,
நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த ஜமாஅத் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர், அன்று மதியம் 03.30 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பாக, அதன் ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, அலுவலர்களான சக்தி குமார். செந்தில் குமார், முஹம்மத் மற்றும் அலுவலர்கள், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். |