காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 16.12.2011 அன்று, செஞ்சுருள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 16.12.2011 அன்று தூத்துக்குடி மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் திரு.பாஸ்கர் பனிராஜன் அவர்கள் தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனை நம்பிக்கை மையத்தின் ஆலோசகர் திரு.மனோகரன் அவர்களும், திருமதி. செல்வி அவர்களும் பேச்சாளராக கலந்து கொண்டனர்.
திரு.மனோகரன் அவர்கள் எச்.ஐ.வி. பாசிடிவ் உள்ள நோயாளிகளின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கு கூற வேண்டிய ஆலோசனை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
திருமதி.செல்வி அவர்கள் எச்.ஐ.வி. பாசிடிவ் உள்ள நோயாளிகள் சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நிலை, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி, எச்.ஐ.வி. பாசிடிவ் பாதிப்பு உள்ளவர்களை அரவணைத்து, அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
திரு.பாஸ்கர் பனிராஜன் அவர்கள், எச்.ஐ.வி. பாசிடிவ் பாதிப்பு உள்ளவர்களுக்கு செஞ்சுருள் சங்கத்தின் மூலம் என்னென்ன உதவிகள் செய்யலாம் என்பதை பற்றி மாணவியர்களிடையே எடுத்துக் கூறினார்.
இக்கூட்டத்தில் கல்லூரியின் பேராசிரியையரும், மாணவியரும் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, கல்லூரியின் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் திருமதி. இரா.அருணா ஜோதி அவர்கள் செய்திருந்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |