செய்தி எண் (ID #) 7767 | | |
ஞாயிறு, டிசம்பர் 25, 2011 |
ஹாங்காங் பேரவையின் மூத்த ஆலோசகர் ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5387 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (65) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, இன்று காலை 09.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் (ஐ.எம்.ஏ.) அமைப்பின் தலைவராகவும் கடந்த காலங்களில் பொறுப்பு வகித்துள்ள இவர், ஹாங்காங்கில் காயலர்களை வயது வேறுபாடின்றி ஒருங்கிணைக்க ஓரமைப்பு தேவை என வலுவாக வலியுறுத்தியவரும், ‘காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங்‘ எனும் பெயரில் அவ்வமைப்பு துவக்கப்பட்ட பின்னர், அதன் அனைத்து நிகழ்வுகளுக்கும் முன்னின்று வழிகாட்டி வந்தவருமாவார்.
இவர், மர்ஹூம் ஹாஜி முஹம்மத் லெப்பை கான் ஸாஹிப் என்பவரின் மகனும்,
மர்ஹூம் ஹாஜி எஸ்.ஏ.எல்.ருக்னுத்தீன் ஸாஹிப் என்பவரின் மருமகனும்,
ஹாஜ்ஜா ஆர்.எஸ்.முஹம்மத் ஆயிஷா என்பவரின் கணவரும்,
ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் கையூம் ஆகியோரின் மைத்துனரும்,
முனைவர் ஹாஜி எம்.என்.முஹம்மத் லெப்பை, ஹாஜி எம்.என்.அப்துல் மாலிக், ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப், ஹாஜ்ஜா எம்.என்.ஜுலைஹா உம்மாள், ஹாஜ்ஜா எம்.என்.ஷேக் ஃபாத்திமா முனவ்வரா ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் ஹாஜி கே.பி.ஜெய்னுல் ஆபிதீன், ஹாஜி ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப் ஆகியோரின் மாமனாருமாவார்.
இவரது மகன் முனைவர் ஹாஜி எம்.என்.முஹம்மத் லெப்பை சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகராகவும், மற்றொரு மகன் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் இப்றாஹீம் ஸாஹிப், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளனர்.
அன்னாரின் ஜனாஸா, நாளை திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்,
காயல்பட்டினம்.
செய்தியில் சில தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. (25.12.2011 - 17:10hrs) |