காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், ஹாங்காங் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் முன்னாள் தலைவருமான காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, 25.12.2011 அன்று காலை 09.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் ஜனாஸா, 26.12.2011 அன்று காலை 11.30 மணியளவில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் செயலர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், ஹாங்காங் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் முன்னாள் தலைவரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைந்தோம்.
மறைந்த இப்பெரியவர், சற்றொப்ப பணிரெண்டு ஆண்டுகளுக்குமுன் துபாய் அஸ்கான் சமூகக் கூடத்தில் நடைபெற்ற எம்மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்தார்கள்.
அவ்வமயம், மன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான நற்கருத்துக்களை சிறப்புற கூறினார்கள். இங்கு பணியில் இருப்பவர்கள், தங்கள் திறமைகளை மென்மேலும் உயர்த்திக் கொள்ளும் வண்ணம், அரபிக் டைபிங், சுருக்கெழுத்து, போன்றவற்றையும் கற்க வேண்டும் என்று கூறினார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக்கொள்வானாக, பிழைகளை மன்னிப்பானாக, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சொர்க்கப்பதியில் வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எண்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் உங்களுக்கு பொறுமையை தருவானாக, ஆமீன்.
இவ்வாறு அமீரக காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |