செய்தி எண் (ID #) 7784 | | |
சனி, டிசம்பர் 31, 2011 |
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையையொட்டி, பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய விஜயகாந்த் கைதைக் கண்டித்து, தேமுதிக சாலை மறியல்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3562 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய |
|
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இரட்டை வேடம் போடுவதாகக் கூறி, அவர் தமிழகத்திற்கு வருவதைக் கண்டித்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழக (தேமுதிக) கட்சி நிறுவனரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கறுப்புக்கொடி காட்டியமைக்காக கைது காவல்துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் சார்பில் திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாவட்ட முன்னாள் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான கோமதி கணேசன் முன்னிலை வகித்தார்.
இப்போராட்டத்தில், காயல்பட்டினம் நகர தேமுதிக சார்பில், அதன் நகரச் செயலாளர் எம்.எச்.எம்.சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், சித்தீக் ஹஸன் ஆகியோர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல் போராட்டம் நடத்தியமைக்காக அவர்களைக் கைது செய்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன் தலைமையிலான காவலர்கள், சில மணி நேரத்திற்குப் பின் அவர்களை விடுதலை செய்தனர்.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்,
துணைச் செயலாளர், தே.மு.தி.க., காயல்பட்டினம். |