அண்மையில் பெய்த பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் நின்றது. அதன் பிறகு வந்த நாட்களில் மிகுந்த பனிமூட்டத்துடன் குளிர்ந்த வானிலை நிலவியது.
இந்நிலையில், இன்று நள்ளிரவு 04.00 மணியளவில் மழை பெய்தது. சாரலாகத் துவங்கி, சிறுமழையாக உருவெடுத்து, அதிகாலை வரை இதமழையாகப் பெய்துள்ளது. இதனால் நகரில் ‘வழமை போல‘ உயர்த்தியமைக்கப்பட்ட சாலைகள் பளபளப்பாகவும், அதன் ஓரங்களும், குடியிருப்பு சந்துகளும் தண்ணீர் தேக்கத்துடனும் காணப்படுகிறது.
நகர வானிலை (மற்றும் வானவியல்) செய்திகளை உடனுக்குடன் காண www.kayalsky.com இணையத்தளம் பார்க்கவும்! |