பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் காயல்பட்டினம் அப்பாபள்ளித்தெருவில் அமைந்துள்ள
சமுதாயக் கல்லூரியில் இக்கல்வியாண்டின் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் சிறப்பாக
நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜனாபா.எம்.எம்.பாத்திமா தலைமை தாங்கினார்.
ஜனாபா.எஸ்.நூர்ஜஹான் முன்னிலை வகித்தார். இறைபிரார்த்தனையுடன் கூட்டம்
துவங்கியது. கல்லூரி முதல்வர் ஜனாப். எம்.ஏ.புகாரி எம்.காம்.,எம்.பில்.,எம்.எட்.,
அனைவரையும் வரவேற்று மாணவிகளின் கல்வி முன்னேற்றம் மற்றும் கல்லூரி வளர்ச்சி
ஆகியவற்றில் பெற்றோரின் பங்கு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். பெற்றோர்-ஆசிரியர்
இடையே கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன. இறுதியில் கல்லூரி வளர்ச்சிக்காக முதல்வர்
எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிப்பது என்பது உட்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் நன்றி நவிழ இறை பிரார்த்தனையுடன்
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர். கூட்டத்தில் பெற்றோர்,
ஆசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:
ஆசிரியர். ஜனாப்.எம்.ஏ.புகாரி, முதல்வர், காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி.
|