ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில், மருத்துவ உதவிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி, 29.12.2011 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
அம்மன்றத்தின் சார்பில, ஹாஜி விளக்கு தாவூத், ஹாஜி டி.ஏ.எஸ்.மீராஸாஹிப், ஹாஜி கே.வி.மொகுதூம், ஹாஜி சாளை எஸ்.எல்.காஜா முஹ்யித்தீன், உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் ஆகியோரடங்கிய நேர்காணல் குழு, அம்மன்றத்தின் சார்பில் மருத்துவ உதவித்தொகை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பயனாளிகளை நேர்காணல் செய்தது.
நிறைவில், மன்றத்தின் சார்பில், மொத்தம் ரூ.1,77,000 (ஒரு லட்சத்து எழுபத்தேழாயிரம் ரூபாய்) தொகை மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.
நேர்காணல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், செய்தித் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் செய்திருந்தனர்.
படம்:
A.H.M.முக்தார் B.Com.,
சென்னை. |