காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலை - விரிவாக்கத் திட்டத்திற்கான ஒப்புதல் கோரி - விண்ணப்பம் செய்துள்ளது. இது குறித்த மக்கள் கருத்து கேட்டுணர்வு கூட்டம் - கடந்த நவம்பர் 29 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் - DCW நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அதிகாரிகளும், காயல்பட்டினம் உட்பட பல ஊர்களை சார்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முழு வீடியோ தொகுப்பினை - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் - Kayalpatnam.com பெற்றுள்ளது. சுமார் 3.5 மணி நேரம் நீடிக்கும் அவ்வீடியோ தொகுப்பு - தற்போது www.Kayal.tv இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும்.
1. Re:DCW விரிவாக்கம் குறித்த ம... posted byvelli muhaideen (chennai)[03 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15431
ஏற்கனவே D.C.W. தொழிற்சாலை வெளியிடும் நச்சு வாயு காரணமாக நமது மக்கள் புற்று நோய் போன்ற கொடுமையான பல வியாதிகளால் இன்னல் பட்டு வருகிறாகள் அது போல் அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நமதுஊர் கடல்நீரை பெரிதளவு மாசு படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனத்தை விரிவு படுத்தும் கோரிக்கையை மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் கண்டிப்பாக நிராகரிக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross