Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:09:48 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7800
#KOTW7800
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 3, 2012
புனித மக்கா காயல் தன்னார்வ மற்றும் வழிகாட்டு அமைப்பு குறித்து ஜித்தா காயல் நற்பணி மன்றம் அறிக்கை!!!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 2455 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜித்தா, சஊதி அரபிய்யா - கடந்த 09.12.2011 வெள்ளிக்கிழமை ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 26வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி மக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ளும் காயல் நகரை சார்ந்த நம் சொந்தங்களுக்கு புனித மக்காவில் தன்னார்வ தொண்டு மற்றும் வழிகாட்டும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எங்களின் எண்ணங்களுக்கு நமது சகோதரர்கள் மத்தியில் உள்ள வரவேற்ப்பை இங்கே நமது இணையதளங்களின் வாசகர்களின் உயரிய கருத்துக்கள் மூலமும், இன்னும் நேரிலும் , பல ஊடகங்கள் வாயிலாகவும் அறிந்து கொண்டு அதற்கான ஆயத்த பணிகளில் எம்மன்றம் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்த உங்கள் அனைவரில் மேலான கருத்துக்களுக்கும் வரவேற்பிற்கும் எமது மன்றம் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், இந்த அமைப்பின் திட்டங்கள் செயல்வடிவம் செய்யப்படும் முன் நமது காயல் சொந்தங்களாகிய உங்கள் அனைவர்களிடமிருந்தும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் நல்லபல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் சீரிய அறிவுரைகளையும் வேண்டுகிறது.

எங்கள் மக்கா காயல் தன்னார்வ மற்றும் வழிகாட்டு அமைப்பிடம் இருந்து என்னென்ன சேவைகள் நமதூர் மக்களால் எதிர்பார்க்கபடுகிறது, மக்காவில் நீங்கள் நாடும் அத்தியாவசிய தேவைகள் என்ன? என்ன வழிகாட்டுதல்களில் இம்மன்றம் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்? என்பன உள்ளிட்ட உங்கள் ஆலோசனைகளையும், இதற்கு முன் ஹஜ்ஜுக்கு வந்து சென்றவர்கள் தாங்கள் பெற்ற அனுபவம் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் தேவைகள் மற்றும் நீங்கள் விரும்பும் சேவைகள் என்ன என்பதனை உங்களின் ஆலோசனையாக எங்களுக்கு இந்த வாசகர் கருத்து பகுதி மூலமாகவோ அல்லது kwajeddah@gmail.com என்ற எங்களின் இணையதள முகவரிக்கோ தெரிவிக்கும் படி அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். இதன் அடிப்படையில் சாத்தியகூறுகளை ஆராய்ந்து மக்கா காயல் தன்னார்வ மற்றும் வழிகாட்டு அமைப்பின் பணிகள் செயல்வடிவப்படுத்தபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நன்மையான காரியங்களின் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம் மேலும் நாங்கள் எடுக்கும் இந்த சீரிய முயற்சியிலும், எங்கள் மன்றத்தில் எல்ல நற்செயல்களிலும் அல்லாஹ் வெற்றியை தந்தருள்வானாக என்று பிராத்திக்கும்படி உங்களை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.

தகவல்,

தலைவர் மற்றும் செயலாளர்
ஜித்தா காயல் நற்பணி மன்றம்


ஜித்தா, சவுதி அரேபியா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புனித மக்கா காயல் தன்னார்...
posted by Cnash (Makkah ) [04 January 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15528

ஒரு நல்ல விஷயத்திற்கு கருத்து தெரிவின்கன்னு வழிய கேட்கிறார்கள்! ஏறிட்டு பார்ப்போர் எவரும் இல்லை!! யானை வெட்டைக்கும் சாணிக்கும் போட்டி போட்டு கமெண்ட் மலையாய் குவிகிறது!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புனித மக்கா காயல் தன்னார்...
posted by S.A.Muhamamd Ali (Dubai) [05 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15554

நண்பர் சீனாவின் ஆதங்கம் புரிகிறது.

1. ஊரில் இருந்து வரும் ஹாஜிகள் தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி எண் கொடுங்கள்.

2 .ஊரில் ஒரு வழி காட்டும் அமைப்பு ஏற்படுத்தி அவர்களுக்கு வரும் முன்பே இங்குள்ள சூழ்நிலைகளை தெரிய படுத்துங்கள்.

3 .வரக்கூடிய ஹாஜிகளின் உறவினர்கள் அங்கே இருந்தால் அவர்களின் தொலைபேசி எண்களையும் கேட்டு அவர்களுக்கு எதாவது தேவை என்றால் உடனே தெரிய படுத்துங்கள்.

4. ஹாஜிகள் வரும் முன்பே அங்கு அவர்களுக்கு என்று ஒரு சிம் கார்டு வாங்கி (ஹஜ் நேரத்தில் சலுகைகள் உள்ள சிம் கார்டு அறிமுகப்படுத்த படும்) அவர்களுக்கு சலுகை விலையில் பேச கூடிய Plan ஏதும் இருந்தால் அதையும் update செய்து கொடுக்கவும். டெலிபோன் செலவு தான் அதிகமாக இருக்கிறது என்று நிறைய பேர் கூறுவார்கள்.

5. அவர்கள் ஊருக்கு செல்லும் போது வாங்கும் பொருள்கள் மக்கா வில் குதிரை விலை கூறுவார்கள். அனைவர்களுக்கும் மொத்தமாக ஜெத்தா வில் இருந்து வாங்கி கொடுத்தால் சந்தோசப்படுவார்கள்.

6. தனியார் மூலம் வரக்கூடிய ஹாஜிகளுக்கு அவர்களுக்கு போதிய வசதி மற்றும் சிறந்த உணவு அளிக்க படுகிறதா என்று கண்காணிக்கவும்.

7 . அங்கு உள்ள சீதோஷன நிலைக்கு தகுந்த மாதிரி ஆரோக்கியத்தை பேண டிப்ஸ் கொடுக்கவும்.

ஆறு முறை ஹஜ் செய்த உங்களுக்கு ஒரு முறை ஹஜ் செய்த நான் டிப்ஸ் கொடுக்க தேவை இல்லை என்று நினைக்கிறன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புனித மக்கா காயல் தன்னார்...
posted by அமீர் சுல்தான் (கிழக்கு மாகாணம், சவுதி அரேபியா) [06 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15622

அல்லாஹ்வின் விருந்தாளிகளை வரவேற்பதற்கு, வழிகாட்டுவதற்கு மற்றும் உதவிகள் செய்வதற்கு முன்வந்திருக்கும் ஜித்தா காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துகள் பல.

இந்திய மக்களின் தன்னார்வ தொண்டு அமைப்பான இந்திய ப்ரட்டர்னிட்டி பாரம் (IFF) கடந்த 6 (அ) 7 வருடங்களாக ஹஜ் பயணிகளுக்கு சேவைகளை செய்துவருகின்றது.அதில் காயல் மக்கள் பலரும் தொண்டாற்றி வருகின்றனர். அவர்களின் ஆலோசனைகளையும் பெறலாம்.

1.ஹஜ்ஜிற்கு வரும்முன்பே அவர்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.உதாரணத்திற்கு - நடைபயிற்சி மேற்கொள்ளுதல். உணவு முறைகள்.

2.கூடாரம் பற்றிய வரைபடத்தினை அவர்களுக்கு விளக்குதல். ௩. எந்நேரமும் அணிந்திருக்க வேண்டிய விபரம் பதிந்த கைப்பட்டைகள். (குளிக்கவோ, கழிப்பிடம் செல்வோர் கழட்டடி வைத்துவிட்டு பின்னர் மறந்து விடுகின்றனர்).

3.நெரிசல் மிகுந்த பகுதிகளில் குறைந்த அளவிலான பொருட்களையும் பணத்தை கொண்டு செல்ல அறிவுரை வழங்குதல்.

4.ஹாஜிகள் வழமையாக உட்கொள்ளும் மருந்துகளை அங்கிருந்தே கொண்டுவர அறிவுரை வழங்குதல் அந்த மருந்து சீட்டுகளையும் மெடிக்கல் ரிப்போர்ட்களையும் கொண்டுவரச் செய்தல்.

5.நோய்கள் பரவுவது உணவுகள் மூலம்தான் எனவே மூடப்படாத சுகாதரமற்ற உணவுகளை தவிர்க்கச் சொல்லுதல்.

6.மக்கா,மதீனா மற்றும் கூடாரங்களில் வழிதவறிவிட்டால் பதற்றமடையாமல் இருக்க அறிவுரை வழங்குதல்.

7. தங்களின் தன்னார்வக்குழுக்கான (help desk) அலைபேசி எண்ணை அனைவரிடமும் கொடுத்தல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved