இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக தன் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டு, காயல்பட்டினத்தில் குடியிருப்போருக்கு, தகுந்த வாழ்வியல் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று நமது தஃவா சென்டரில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை கற்று அதன் பின்னா; இஸ்லாத்தில் நிலையாக இருக்கும் வண்ணம் தங்களின் வசிப்பிடங்களை காயல்பட்டணத்தில் அமைத்துக் கொண்ட சகோதர, சகோதரிககள் பலா;. அவர்கள் தங்களின் ஈமானை புதிப்பித்துக் கொள்ளும் பொருட்டு தஃவா சென்டர் மூலம் தர்பிய்யா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய சகோதரா;களுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி நடைப் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அதன் தொடர்ச்சியாக ஜனவரி 1 அன்று அவர்களுக்கான தர்பிய்யா வகுப்பு நமது தஃவா சென்டர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 10 மணி முதல் மதிய 1 மணி வரை நடைபெற்றது. இதில் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று காயல்பட்டணத்தில் வசிக்கும் சகோதர, சகோதரிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பத்தனா; அல்ஹம்துலில்லாஹ்.
இதில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஈமானை புதுப்பி;ப்போம் என்ற தலைப்பில் (தஃவா சென்டர்) புனித குர்ஆன் கல்லுhரியின் முதல்வா; மௌலவி ஷேக்அலி ஃபிர்தௌசி அவர்கள் உபதேசம் பண்ணினார்கள்.
மதியம் 12 முதல் 1 மணி வரை அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் கலந்துரையாடலின் போது தஃவா சென்டர் பொருளாளா; ஃபாயீஸ், தஃவா சென்டரின் அங்கத்தினராக உள்ள அஹமது ஷாகிப் மற்றும் அப்துல் ஃபாசித் போன்றோர்களும் கலந்து கொண்டு நமது ஊரில் வாழும் இஸ்லாத்தை தழுவிய சகோதர, சகோதரிகளின் நிலைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்கள். மேலும் அடிப்படையில் அவர்களுக்கு காயல்பட்டணத்தில் சந்திக்கின்ற இன்னல்கள் பற்றியும் கேட்டு தெரிந்து அதற்கு தீர்வுகள் தருவதாகவும் கூறியுள்ளனா; இன்ஷாஅல்லாஹ்.
கலந்துரையாடலில் பகிர்ந்து கொண்டவைகள்
1. மாதந்தோறும் இஸ்லாத்தை தழுவிய சகோதர, சகோதரிகளுக்கு தர்பிய்யா வகுப்பு
2. பெண்களுக்கு சிறப்பு வார பயான்கள்.(வார வாரம் சனிக்கிழமை ஒவ்வெறு சகோதரியின் வீட்டில்)
3. ஏதாவது ஒரு பள்ளி ஜமாத்தில் இஸ்லாத்தை தழுவியவா;களை சேர்ப்பது தொடர்பாக.
4. வீடு வாடகைக்கு கிடைப்பதில் ஏற்படும் பிரச்சணைகளிலிருந்து மீள அனைவரும் ஒன்றாக இருக்கும் வண்ணம் காயல்பட்டண மக்களைத்தொடர்புகொள்வது.
போன்ற விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து பாpமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷாஅல்லாஹ் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கின்ற தர்பிய்யாவில் இஸ்லாத்தை தழுவியவா;களின் நிலை பற்றி அறிய விரும்புபவா;களா நீங்கள் ?...
தாங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கலாம் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்குரிய தேதி முடிவு செய்யப்பட்டவுடன் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |