ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 2011 டிசம்பர் 26ஆம் தேதி திங்கட்கிழமையன்று இரவு 07.30 மணிக்கு காயல்பட்டினம் வள்ள்ல் சீதக்காதி திடலில் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை - இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (ஐ.எஃப்.டி.) நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.ஸ்.ஹபீப் முஹம்மத், அதன் மொழியாக்கத் துறை பொறுப்பாளர் மவ்லவீ முஹம்மத் நூஹ் மஹ்ழரீ ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காயல்பட்டினம் கிளை சார்பாக,
S.H.லுத்ஃபீ,
தைக்கா தெரு, காயல்பட்டினம். |