காயல்பட்டினத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தக் கோரி, காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை உள்ளடக்கிய தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில், நகரின் பெரும்பாலான ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனு 02.01.2012 திங்கட்கிழமை - மக்கள் குறைதீர் நாளன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அக்கோரிக்கை வாசகங்கள் பின்வருமாறு:-
மரியாதைக்குரிய ஐயா!
காயல்பட்டினம் கே.டி.எம்.தெரு, தாயிம்பள்ளி ஜமாத் மக்கள் மற்றும் அடியில் சீலிட்ட அனைத்து ஜமாத்தார்களின் ஒட்டுமொத்த விண்ணப்பம் யாதெனில்,
பரந்து விரிந்து விட்ட காயல்பட்டண நகரத்தில் மக்கள் தொகையும், மற்றும் வாகன போக்குவரத்து நெருக்கடி நெரிசலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதால், அதனால் ஏற்படும் பல இன்னல்களை அன்றாடம் அனுபவித்து வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இந்த இன்னல்களுக்கு ஒருவடிகாலாக ஒருவழிப்பாதையே சிறந்த தீர்வு என்று முடிவு செய்து, எளிய முறையில், எந்த பொருட் செலவும் வராமல், எந்த குறுகிய வளைவுகளும் இல்லாமல், ஊரிலேயே விசாலமான தெருவாக அமைந்திட்ட பாதையாகிய பெரிய நெசவு தெரு, லெப்பைத்தம்பி சாலை மிக, மிக பொறுத்தம் என்று தேர்வு செய்து பலவௌ;ளோட்டமும் வெற்றியாக நடந்தேறியது.
பேரூந்துகள் அவ்வழியே ஒரு மாதத்திற்கு மேல் சென்று கொண்டிருக்கும்பொழுது மாவட்ட காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவைகள் பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை அமுல்படுத்த வேண்டி புதிய பேரூந்து நிலையத்திலிருந்து பெரிய நெசவுத்தெரு நுழைவு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பல லட்சம் ரூபாய் செலவழித்து ரோட்டினை அகலப்படுத்தினார்கள். இப்பணி நடைபெறுவதற்காக தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்திய நேரத்தில்,
பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த சில நபர்கள் பேரூந்துகள் இவ்வழியே செல்லகூடாது என்ற தடையை பெற்று, போக்குவரத்தை நிறுத்தினார்கள். அவர்கள் வாங்கிய தடை நீங்கிய பிறகும், அத்தெருவைச் சேர்ந்த ஒருசில நபர்கள் சில சுயநல ஆதாயத்தின் அடிப்படையில் இதை எதிர்பதையே இலட்சியமாகவும், ஊர் மக்கள் ஒட்டுமொத்த விருப்பத்திற்கு மாற்றமாகவும் செயல்படுவதோடு, மாற்று வழியை செயல்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர்கள் கூறும் மாற்றுவழி சாத்தியமே அல்ல. தெருவின் அகலத்தால் நாம் தேர்வு செய்துள்ள இடம் 11 மீட்டர் அவர்கள் சொல்லும் இடமோ 7 மீட்டருக்கு குறைவானது மட்டுமல்ல. மிக, மிக குறுகிய பாதை. அதை சீராக்கி சமநிலை படுத்துவதற்கு பல லட்சங்களை செலவு பண்ணுவதோடு பல வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இடத்தாலும், பொருளாலும், காலத்தாலும் எந்த சிரமமும் இல்லாமல், உடனடியாக பயன்பாட்டுக்குறிய வழி, தாயிம்பள்ளிவாசல் காம்பவுண்டு சுவர் வழியாக சென்று பெரிய நெசவு தெரு, லெப்பைத்தம்பி சாலை வழியாக எளிதாக புதிய பேரூந்து நிலையத்தை அடையும் வழி.
ஊர் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டை மனதில் கொண்டு, தாயிம்பள்ளிவாசல் நிர்வாகம், தங்களுக்கு சொந்தமான ரோட்டோரம் உள்ள இடத்தை, தென்வடல், கிழமேல் திசையாக, சுமார் 2000 சதுர அடியை விட்டு கொடுத்து, காம்பவுண்டு சுவரை உள்வாங்கி கட்டி இருக்கிறோம்.
தற்போதுள்ள வாகன நெருக்கடியால் பல இன்னல்களோடு, பலவகையான பாதிப்புகளுக்கும் ஆட்படுகிறோம். அதிலொரு பாதிப்பாக பல பேரூந்துகள் காயல்பட்டணம் வராமல் அடைக்கலாபுரம் வழியாக சென்றுவிடுவதுதான்.
ஊர் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு. ஒருவழிப்பாதை உடனே வர வேண்டும். அதுவும் பெரிய நெசவு தெரு வழியாக வருவது மிக, மிக வசதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
காயல்பட்டணம் முன்னால் நகராட்சி தலைவர் அவர்கள் தலைமையில், ஊர் முக்கியமானவர்களடங்கிய குழு, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் ஒருவழிப்பாதைக்கு பொறுத்தமான வழி பெரிய நெசவு தெரு தான் என்று ஏகமனதாக ஏற்று 05-04-2007 அன்று தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறார்கள். அத்தீர்மான நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.
ஆகவே, சமூகம் காயல்பட்டண மக்களின் ஒட்டுமொத்த உணர்வை ஏற்று உடனடியாக ஒருவழிப்பாதைக்குறிய ஏற்பாட்டை அவசர ஆணையாக பிறபிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கடந்த வெள்ளியன்று எங்கள் ஜமாத் மக்களுடன் ஊர் மக்களும் உங்களை நேரில் சந்தித்து விபரங்களை விளக்குவதற்காக எதிர்பார்த்திருந்தோம். அன்று வெள்ளிக்கிழமையாகையால் முக்கிய பிரார்த்தனையாகிய ஜும்மாத் தொழுகைக்கு சென்றதால், அந்த நேரத்தில் நீங்களும் வருகை புhpந்ததால், எங்களால் சந்திக்க முடியவில்லை.
சந்திக்க காலம் கை கொடுக்காவிட்டாலும், இறைவணக்கத்திற்கு செல்லும் நமக்கு, நல்ல வழியே பிறக்கும், அதற்கு நல்லெண்ணம் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவரும் நடுநிலையுடைய வழியை நமக்கு செய்வார் என்ற நம்பிக்கையில் சென்றோம்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒட்டுமொத்த ஊர்மக்கள் சார்பாக இந்த கோரிக்கை மனுவை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். நன்றி
இவ்வாறு அந்த மனுவின் வாசகங்கள் அமைந்துள்ளது.
அக்கோரிக்கை மனுவுடன்,
1. ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்ட தீர்மான நகல்,
2. மக்கள் குறைதீர்க்கும் திட்டம் மனுக்கள் நகல்,
3. நெடுங்சாலை ஊரகப்பணித்துறை 7339ஃ99-25-11-99 கடித நகல்,
4. நெடுங்சாலை ஊரகப்பணித்துறை 560ஃ2000-21-03-2000 கடித நகல்,
5. போக்குவரத்துத்துறை 34461-இ-2ஃ99-22-11-99 கடித நகல்,
6. போக்குவரத்துத்துறை ந.க.எண் 15ஃ87ஃஇஃ2ஃ2000 11-04-05 கடித நகல்,
7. முன்னால் நகராட்சித்தலைவர் வாவு செய்யது அப்துற்றஹ்மான் ஹாஜி அவர்கள் 30-07-2007 அன்று நடத்திய கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் நகல்,
8. நகராட்சி மன்றம் 11-02-2008 அன்று நிறைவேற்றிய தீர்மான நகல்,
ஆகிய ஆவணங்களும் இணைத்தளிக்கப்பட்டது.
இக்கோரிக்கையின் நகல்,
1. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி,
2. கோட்டப் பொறியாளர் அவர்கள், நெடுஞ்சாலை துறை, தூத்துக்குடி,
3. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்கள், தூத்துக்குடி,
4. தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காயல்பட்டணம் நகராட்சி,
5. ஆணையர் அவர்கள், நகராட்சி, காயல்பட்டணம்,
6. கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) அவர்கள், காயல்பட்டணம்,
7. வருவாய்துறை அதிகாரி (ஆர்.டி.ஓ.) அவர்கள், திருச்செந்தூர்
ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் மேற்படி கோரிக்கைக மனுவின் நகல் தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் வழங்கப்பட்ட காட்சி:-
ஒருவழிப்பாதையின் அவசியம் என்று கருதி, தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் கோரிக்கைக்கு, நகர மஹல்லா ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் முழு சம்மதத்தையும், ஆதரவையும் அளித்து வழங்கியுள்ள முத்திரைப் பதிவுகள் மற்றும் கைச்சான்றுகள் பின்வருமாறு:-
கோரிக்கை மனுக்களை, தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி தலைமையில், துணைத்தலைவர் ஹாஜி ஏ.கே.யாஸீன் மவ்லானா, செயலாளர் ஹாஜி எம்.அஹ்மத், துணைச் செயலாளர்களான எஸ்.எச்.முஹம்மத் நியாஸ், எம்.எச்.அப்துல் வாஹித், பொருளாளர் ஹாஜி கே.எம்.தவ்லத், நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி ஆதம் சுல்தான், எம்.என்.காஜா ஹைதர் அலீ, எம்.எச்.ஷம்சுத்தீன், எம்.ஏ.அப்துல் ஜப்பார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களான எம்.ஏ.ஷேக், எஸ்.எம்.கே.மெய்தீன், எஸ்.ஏ,சாமு, எம்.எம்.சாமுனா லெப்பை, எம்.சாவன்னா, ஏ.கே.செய்யித் இல்யாஸ், அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் ஆகியோர் இணைந்தளித்தனர்.
தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி,
பிரதான வீதி, காயல்பட்டினம்.
படங்கள்:
M.A.அப்துல் ஜப்பார்.
செய்தியில் சில தகவல்கள் இணைக்கப்பட்டது. (05.01.2012 - 08:43hrs) |