சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு அண்மையில் துவக்கி, பின்னர் பல்வேறு குழுக்களாக கட்டமைக்கப்பட்ட காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பை, காயல்பட்டினத்தில் அறிமுகப்படுத்தும் பொருட்டு, அறிமுக நிகழ்ச்சி 29.12.2011 வியாழக்கிழமை மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் துளிர் கேளரங்கில் நடைபெற்றது.
அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆடிட்டர் எஸ்.எஸ்.அஹ்மத் ரிஃபாய் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஏ.எச்.எம்.முக்தார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். துவக்கமாக ஹாஃபிழ் எம்.ஏ.சி.அஹ்மத் முஜாஹித் இறைமறை வசனங்களை ஓத, ஹாஃபிழ் எம்.ஏ.சி.அஹ்மத் தாஹிர் அவ்வசனங்களுக்கான தமிழாக்கத்தை வாசித்தார்.
அடுத்து, அமைப்பின் வேலைவாய்ப்புக் குழு உறுப்பினர் குளம் இப்றாஹீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் தலைமையுரையாற்றிய ஆடிட்டர் எஸ்.எஸ்.அஹ்மத் ரிஃபாய், உரையின் நிறைவில், அமைப்பின் உள்ளூர் பிரதிநிதியாக செயல்பட இசைவு தெரிவித்துள்ள ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்களை விழாவில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எச்.என்.ஸதக்கத்துல்லாஹ், KCGC அமைப்பு குறித்து அறிமுகவுரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:-
அருளாளன் அன்புடையோன் எல்லாம்வல்ல இறைவனின் பேரருளால், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் குறித்த அறிமுகவுரையினை இந்நிகழ்வில் தங்கள் முன் தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
உலகம் முழுவதும் பரந்து விரிந்து, வியாபாரத்திற்காகவும், பணி நிமிர்த்தமாகவும் உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று, தம் வாழ்வை அமைத்துக்கொண்ட நமதூர் சகோதரர்கள், அவரவர் பகுதிகளில் காயல் நல மன்றங்களை அமைத்து, நகர்நலனை முன்னிறுத்தி, கல்வி, மருத்துவம், சிறுதொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் தன்னிறைவு பெற சிறப்புற செயலாற்றி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது.
அந்த ரீதியில், சென்னைவாழ் காயலர்களை உள்ளடக்கி, நமது நகர மக்களுக்கு, சரியான வழிகாட்டுதல்களை கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் Kayalpatnam Chennai Guidance Centre – KCGC என்ற பெயரில் இறையருளால் அமைப்பு துவக்கப்பட்டு, அதன் பணிகள் தொடர்ந்த நிலையிலுள்ளது.
இதற்காக, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையமானது 03.07.2011 அன்று, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில், நமது சென்னைவாழ் காயலர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வின்போது துவக்கப்பட்டது.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் நமது மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
செயல்படும் திறன் அடிப்படையில், KCGC யின் துவக்கக் கூட்டத்திலேயே பின்வருமாறு குழுக்கள் பிரிக்கப்பட்டு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்:-
== ஒருங்கிணைப்புக்குழு
(i) ஆடிட்டர் எஸ்.எஸ். ரிபாய்
(ii) ஹாஜி ஹெச்.என். சதக்கத்துல்லாஹ்
(iii) ஹாஜி எம்.எஸ். அப்துல் காதர் (ஸ்மார்ட்)
(iv) எஸ். ஹெச். ஷமீமுல் இஸ்லாம்
(v) எம்.எஸ். முஹம்மது சாலிஹு
(vi) குளம் முஹம்மது தம்பி
(vii) முஹம்மது முக்தார்
== கல்விக்குழு
(i) ஹாஜி வாவு மஸ்னவி
(ii) வழக்கறிஞர் துளிர் அஹ்மத்
(iii) ஷேக் சுலைமான் (Earth Science)
(iv) எம்.எம். செய்யத் இப்ராஹீம்
(v) சாளை பஷீர்
== வேலைவாய்ப்புக்குழு
(i) ஹாஜி குளம் இப்ராஹீம்
(ii) பல்லாக் பி.ஏ.கே. சுலைமான்
(iii) ஹாஜி எம்.என். அப்துல் காதர் (முத்துவாப்பா)
(iv) வி.எம்.ஐ.எஸ். முஹம்மது முஹைதீன்
== மருத்துவக்குழு
(i) டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
(ii) டாக்டர் ஏ. நவாஸ்
(iii) டாக்டர் டி. கிஸார்
(iv) டாக்டர் கானி சேக்
(v) டாக்டர் இஸ்மாயில்
தொடர்ந்து பல ஆலோசனைகளின் அடிப்படையில், கடந்த 11.12.2011 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள Preston International College - ப்ரெஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரியில் வைத்து நடைபெற்ற KCGCயின் பொதுக்குழுக் கூட்டத்தில், முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அதில், நமது சகோதரர்கள் பெருமளவில் கலந்து சிறப்பித்ததை website news மூலம் நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
கடந்த 26.11.2011 அன்று, KCGCயின் நோக்கங்களில் ஒன்றான வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் பரிமாறிக்கொள்ள வசதியாக, www.kayaljobs.com என்ற வலைதளமும் துவக்கப்பட்டு, அதன் பணிகள் சிறப்புற நடைபெற்று வருகிறது.
KCGCயின் அலுவலகம் சென்னை, ஆயிரம் விளக்கு Greems Road இல் அமைந்துள்ள ESKAY பில்டிங்கில் மூன்றாவது மாடியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தொடர்பு வசதிக்காக, www.kcgc.in என்ற website, ஈமெய்ல் வசதிக்காக, ஒவ்வொரு குழுக்களுக்கும் முறையே
coordination@kcgc.in
jobs@kcgc.in
medical@kcgc.in
education@kcgc.in
ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்யப்பட்டு, தகவல் பரிமாற்றங்கள் முறையாக நடைபெற்று வருகிறது.
இறையருளால், தற்போது KCGCயின் அறிமுக விழாவினை நமதூரில் நடத்தி வருகிறோம், அல்ஹம்துலில்லாஹ்!
எங்களின் பணிகள் சிறக்க தங்களின் மேலான ஒத்துழைப்புகளையும், துஆக்களையும் எதிர்பார்த்தவர்களாக காத்திருக்கிறோம் என்று கூறி, எனதுரையை நிறைவு செய்கிறேன், நன்றி, வஸ்ஸலாம்.
இவ்வாறு, எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, KCGC துணைக்குழுக்களில் ஒன்றான கல்விக்குழுவின் செயல்பாடு குறித்து அக்குழு உறுப்பினர் சாளை பஷீர் அஹ்மத் விளக்கவுரையாற்றினார்.
அடுத்து, மற்றொரு துணைக்குழுவான வேலைவாய்ப்புக் குழுவின் செயல்பாடு குறித்து அக்குழு உறுப்பினர் பாளையம் முஹம்மத் சுலைமான் உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அன்பின் காயல்பட்டினம் வாழ் சகோதர-சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் காயலர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டதே நமது சென்னை – காயல்பட்டினம் வழிகாட்டு மையம்.
மேற்சொன்ன துறைகளுக்கு தனித்தனியே குழுக்கள் நியமிக்கப்பட்டு, அதனதன் பணிகள் இறையருளால் இயன்றளவுக்கு சிறப்புற செய்யப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், வேலைவாய்ப்புக் குழுவில் நமதூரைச் சார்ந்த
(i) ஹாஜி குளம் இப்ராஹீம்
(ii) பல்லாக் பி.ஏ.கே. சுலைமான்
(iii) ஹாஜி எம்.என். அப்துல் காதர் (முத்துவாப்பா)
(iv) வி.எம்.ஐ.எஸ். முஹம்மது முஹைதீன்
ஆகிய நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் செயல்திட்டங்கள் பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது:-
(1) படிப்புக்கேற்ற வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு தகுந்த வழிகாட்டல்...
(2) வேலை தேடும் இளைஞர்களுக்கு, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் உள்ளிட்டவற்றுக்கு முறையான பயிற்சிகளை வழங்கல்...
(3) வேலை தேடும் – வேலையிலிருக்கும் இளைஞர்களுக்கு தகவல் தொடர்புத்துறை, பேச்சுத் திறன் சார்ந்த சிறப்புப் பயிற்சிகளை அது தொடர்பான துறை வல்லுனர்களின் உதவியுடன் நடத்தல்...
(4) அண்மையில் துவக்கப்பட்ட www.kayaljobs.com வலைதளம் மூலம் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடுவது...
(5) வேலை தேடுவோரின் விபரங்கள் அடங்கிய விபரப்பட்டியலை (database) www.kayaljobs.com வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக, சென்னையிலும், காயல்பட்டினத்திலும் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள்...
இவ்வாறு வேலைவாய்ப்புக் குழுவின் செயல்திட்டங்கள் சுருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சேவைகளை காயலர்கள் பெற்றிடுவதற்காக சென்னையில் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. காயல்பட்டினத்திலிருந்து அமைப்பு ரீதியாக தொடர்புகொள்ள விரும்புவோரின் வசதிக்காக, ஹாஜி N.S.E.மஹ்மூது அவர்கள் மக்கள் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவைப்படுவோர் அவர்களை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு, வேலைவாய்ப்புக்குழு உறுப்பினர் பாளையம் முஹம்மத் சுலைமான் உரையாற்றினார்.
அடுத்து, மற்றொரு துணைக்குழுவான மருத்துவக் குழுவின் செயல்பாடுகள் குறித்து அக்குழு உறுப்பினர் டாக்டர் இசட்.ஏ.முஹம்மத் நவாஸ் உரையாற்றினார். அவரது உரை பின்வருமர்று:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அன்பின் காயல்பட்டினம் வாழ் சகோதர-சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் காயலர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டதே நமது சென்னை – காயல்பட்டினம் வழிகாட்டு மையம்.
மேற்சொன்ன துறைகளுக்கு தனித்தனியே குழுக்கள் நியமிக்கப்பட்டு, அதனதன் பணிகள் இறையருளால் இயன்றளவுக்கு சிறப்புற செய்யப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், மருத்துவக்குழுவில் நமதூரைச் சார்ந்த சென்னைவாழ் மருத்துவர்கள்
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்,
டாக்டர் நவாஸ் ஆகிய நான்,
டாக்டர் கானி ஷேக் முஹம்மத்,
டாக்டர் முஹம்மத் கிஸார்,
டாக்டர் இஸ்மாயில்
ஆகிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் செயல்திட்டங்கள் பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது:-
(1) மருத்துவத் தேவைக்காக சென்னைக்கு வருவோருக்கு அவர்களின் நோய் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்து சரியான வழிகாட்டுதல்...
(2) டியாலிஸிஸ், ஸ்கேனிங் உள்ளிட்ட விலையுயர்ந்த மருத்துவ பரிசோதனைகளை சரியான இடத்தில், குறைந்த கட்டணத்தில் நிறைவேற்றிட தேவையான வழிகாட்டுதல்...
(3) தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகளை நோயாளிகள் குறைந்த விலையில், சரியான இடத்தில் பெற்றிட வழிகாட்டுதல்...
(4) சென்னையில் வசிக்கும் KCGC உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட பருவ இடைவெளியில் மருத்துவ இலவச முகாம்களை நடத்தல்...
(5) சென்னைவாழ் காயலர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் பெற்றிடுவதற்காக குழு மருத்துவக் காப்பீடு (Group Medical Insurance) பெற்றிடுவது குறித்து, மார்க்கத்திற்கு முரணற்ற வகையில் வழிகாட்டுதல்...
இவ்வாறு மருத்துவக் குழுவின் செயல்திட்டங்கள் சுருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சேவைகளை காயலர்கள் பெற்றிடுவதற்காக சென்னையில் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. காயல்பட்டினத்திலிருந்து அமைப்பு ரீதியாக தொடர்புகொள்ள விரும்புவோரின் வசதிக்காக, ஹாஜி N.S.E.மஹ்மூது அவர்கள் மக்கள் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவைப்படுவோர் அவர்களை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு, மருத்துவக்குழு உறுப்பினர் டாக்டர் இசட்.ஏ.முஹம்மத் நவாஸ் உரையாற்றினார்.
அதனையடுத்து, வாழ்த்துரை நிகழ்ச்சி துவங்கியது. கத்தர் காயல் நல மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், வடஅமெரிக்க காயல் நல மன்றத்தின் சார்பில் முஹ்ஸின், அமீரக காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, ஐ.எஸ்.எஃப். அமைப்பின் பொருளாளர் ஹாஜி எஸ்.இப்னு சஊத்,
சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் அமைப்பின் செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, ஹாஜா அரபீ, பொதுநல ஆர்வலர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், கே.ஏ.மேனிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் குமரகுரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், அமைப்பின் செயல்பாடுகள் குறித்த பொதுமக்களின் சந்தேகங்கள், ஆலோசனைகளுக்கு, துணைக்குழுவினரால் விளக்கமளிக்கப்பட்டது.
KCGC வேலைவாய்ப்புக் குழு உறுப்பினர் எம்.என்.அப்துல் காதிர் முத்துவாப்பா நன்றி கூற, துஆ - கஃப்ஃபாராவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா,
அமீரக காயல் நல மன்றத்தைச் சார்ந்த ஹாஜி துணி உமர், ஹாஜி விளக்கு ஷேக் தாவூத், ஆடிட்டர் அப்துல்லாஹ், இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், கத்தர் காயல் நல மன்றத்தைச் சார்ந்த ஹாஜி உமர் அனஸ், காயல்பட்டினம் நல அறக்கட்டளை செயலர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி எல்.டி.இப்றாஹீம்,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, ஹைரிய்யா, பாக்கியஷீலா, ஜமால் ஆகிய முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
வாழ்த்துரை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, கூட்டாக தொழுகை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
A.H.M.முக்தார் B.Com.,
சென்னை. |