சென்னை முதல் கன்னியாகுமரி வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) செயல்திட்டம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கடற்கரைப் பகுதியான காயல்பட்டினத்தை இணைக்காமல் வழித்தடம் அமையவுள்ளதென அறிவதாகவும், காயல்பட்டினம் வழியே இச்சாலையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம், நகர தேமுதிக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் நகர துணைச் செயலாளர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் நமதூர் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய நகரங்களுக்கு அடுத்தப்படியாக உள்ள, குறிப்பாக கடற்க்கரையை ஒட்டியுள்ள ஒரு நகரமாகும்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கன்னியாக்குமரி வரையுள்ள ECR ரோடு நமதூர் வழியாக இல்லாமல் அம்மன்புரம், அடைகலபுரம் வழியாக வரப் போகிறது என்ற ஒரு தகவல் வந்ததின் பேரில் நாங்கள் எந்த ஒரு அரசியல் ஆதாயமும் இன்றி ஊரின் நன்மையை கருதியும் அதனுடைய உண்மை நிலவரம் என்ன? என்பதனை பார்பதற்க்காக நாங்கள் கேள்விப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டப்போது அடைக்கலாபுரம் அருகிலுள்ள ராணிமகாராஜாபுரம் என்ற ஊரில் அதற்க்கான அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும், அருகில் வசிப்பவர்களிடம் விசாரிக்கையில் ECR ரோடு இந்த வழியாக வரப்போகிறது என்றும் சொன்னார்கள்.
நமதூரைப் புறக்கணித்து மறு வழியாக ECR ரோடு வந்தால் நம்மூர் ஒரு தீவு போல் ஆகிவிடும்.ECR ரோடின் முக்கியமான நோக்கமே ஆபத்தான காலங்களில் பயன் படுத்தவும், போர்காலங்களில் ராணுவ தளவாடங்கள் கடற்கரை வழியாக கொண்டு செல்வதர்க்காகத்தான். ஆனால் இப்பொழுது இவர்கள் தேர்ந்தேடுத்த பாதை கடற்கரயில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வழியாக செல்கிறது, நமதூரில் இருக்கும் வாகன நெரிசல் காரணமாக தொலை தூரப் பேரூந்துகளில் அநேகமும் அடைகலாபுரம் வழியாகத்தான் செல்கிறது.
ECR ரோடும் நமதூர் வழியாக இல்லாவிட்டால் நாம் ஆறுமுகநேரி,அம்மன்புரம் சென்றுதான் பஸ் ஏறவேண்டிவரும்.மட்டும் அல்லாமல் வெளியூர்களிலும்,வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வந்து, சென்றுக் கொண்டிருக்கின்ற நமதூர் மக்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பே.
இதையெல்லாம் மனதிற்கொண்டு ஐந்தாம் வார்டு கவுன்சிலர் ஜகாங்கீர் மூலமாக தலைவர், துணைதலைவர் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து ஏற்கனவே ஐக்கியப் பேரவை மூலம் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கொடுத்த மனுவின் காப்பியையும் கொடுத்து, நகர்மன்றத்தின் தலைவரும் ஓட்டுமொத்த உறுப்பினர்களும் சேர்ந்து கலக்டருக்கும்,நெடுஞ்சாலை துறையினருக்கும் மனு கொடுக்கவேண்டும். நீங்கள் அனைவர்களும் சேர்ந்து மனு கொடுப்பது என்பது ஊர் மக்கள் அனைவர்களும் சேர்ந்து கொடுப்பதற்கு சமம் என்று சொன்னோம்.
இதனை அதில் கலந்துகொண்ட தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர்.இதன் அடிப்படையில் அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் அவர்களை நம் நகர் மன்ற தலைவர்,துணைதலைவர் மற்றும் உறுப்பினர்களும் சந்தித்து மனு கொடுத்தனர்.இந்த விஷயத்தில் துரிதமாக செயல்பட்ட நம் நகர்மன்றத்தினரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக வாழ்த்துகிறோம். நன்றி!
இவ்வாறு நகர தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம்:
M.ஜஹாங்கீர்,
காயல்பட்டினம். |