காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியில் பயின்றோர் பேரவைக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவை மாணவி ஜெ.ஏ.நர்கீஸ் பானு கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பயின்றோர் பேரவை செயலர் ஐ.எஸ்.கதிஜத் பைரோஸ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் ஜனாபா.ஹைரிய்யா எம்.ஏ. அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜனாப். எம்.ஏ.புகாரி எம்.காம்.,எம்.பில்.,எம்.எட், அறிமுக உரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி மன்ற தலைவர் ஜனாபா.ஆபிதா ஷேக் பி.எஸ்.இ.,பி.எட்., அவர்கள் கலந்து மாணவிகளின் கல்வி முன்னேற்றம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர்களது பணி சிறக்க வாழ்த்தி கல்லூரி சார்பில் ஆசிரியை செல்வி கார்த்திகா மற்றும் சந்தானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். இறுதியில் ஜனாபா.எஸ்.ஏ.செய்தாமினா நன்றி நவிழ, இறை பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
விழாவில் முன்னாள் மாணவிகள், தொலைநெறி கல்வி பயிலும் மாணவிகள், இந்நாள் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
தகவல்:
எம்.ஏ,புகாரி, எம்.காம்.,எம்.பில்.,எம்.எட்.,
முதல்வர், காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி, காயல்பட்டினம்.
|