29.12.2011 அன்று மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலக மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
அப்போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் பிரத்தியேக தொகுப்பு:
நன்றி: ஆசிப் அஹ்மத் குரைஷி மற்றும் தாவூத் ஷா, மூன் டிவி.
3. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted byKM Abdul Hadhi(Eta) (Jeddah Ksa)[06 January 2012] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15627
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹா..
மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.
ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் மேலும் பல சாதனைகள் செய்யவும் மேலும் பல நம்மூர் மாணவர்களும் பற்பல சாதனைகள் புரியவும் இறைவனை வேண்டுகிறேன்.
5. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted bybuhari (chennai)[06 January 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 15636
மூன் டிவி மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் வாங்கிய என் அருமை சாச்சபா மர்ஹூம். "S .n .haja sulaiman " அவர்களின் குமாரர் சாதனை புரிந்த ஹாஃபிழ் எஸ்.முஃபீஸுர்ரஹ்மான்க்கு. என் உடைய சார்பாகவும். என் குடும்பதீனர்கள் சார்பாகவும், எங்கள் உடைய மனம் மார்த
வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
6. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted byஹாஜி (Riyadh)[06 January 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15640
மாஷா அல்லாஹ் ,
மூன் டிவி மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்த ஹாஃபிழ் எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள் இது போல் மேலும் பல சிறந்த ஹாஃபிழ் உருவாக்கப்பட வேண்டும் இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் துணை இருப்பான் ..
7. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted byK.D.N.MOHAMED LEBBAI. (AL-KHOBAR)[06 January 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15641
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்.மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில்.
நம் ஊர் மாணவர் ஹாஃபிழ் K.S.முஃபீஸுர்ரஹ்மான் NO.1. பெற்று சாதனை புரிந்துள்ளார்.என்பதை நாம் அறியும் போது நம் மனதுக்கு மிக சந் தோஸமகா உள்ளது.
சாதனை புரிந்துள்ளார் மாணவனுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்.
8. இவர் இதைப் பெறுவார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.......... posted byShameemul Islam SKS (Chennai)[06 January 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 15644
இவர் இதைப் பெறுவார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.
இந்நிகழ்வில் மட்டும் அல்ல, எந்நிகழ்விலும்.
பிற பிள்ளைகளின் சிந்தைகள் எங்கெங்கோ சுற்றி வரும் வேளை இப்பிள்ளையின் சிந்தனையோ குர்ஆனோடும் மார்க்கத்தோடும் தான்.
இவர் நடையிலும் உடையிலும் சிரிப்பிலும் (மார்க்க) சிந்தனையிலும் மறைந்த சகோதரன் ( அல்லாஹ் அவரை மன்னிக்கட்டும் ) S.N.ஹாஜா சுலைமான் (அ.மு. பால்பண்ணை, கொச்சியார் தெரு) ஐ ஒத்திருக்கிறது.
அல்லா பரிசு பெற்ற சகோதரரின் வருங்கால வாழ்வை சிறப்பாக்கி வளமாக்கி வைப்பானாக, ஆமீன்.
இவர் படித்த அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஹிப்ஃழ் பிரிவின் நிர்வாகிகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
இவரை உருவாக்கிய இன்னும் இவர் போல் எண்ணற்ற இளவல்களை இப்போது உருவாக்கி வருகிற இம்மனனப் பிரிவு ஆசிரியர்களுக்கும் என் அகம் கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ஜஸாகுமுல்லாஹு ஃகைரன்.
12. செய்தி ரொம்பவும் தாமதம். posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[06 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15657
என்னுடைய அருமை நண்பனாக இருந்த இளம் வயதினிலே அல்லாஹுவின் நாட்டப்படி மரணம் அடைந்த மர்ஹூம் S.N.காஜா சுலைமான் உடைய மகனாகிய அல்ஹாபிஃழ் K.S முபீதுர்ரஹ்மான் என்ற இந்த அருமை பிள்ளைக்கு இந்த சிறப்பை வழங்கிய அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும்.
இந்த நல்ல நேரத்தில் எனது நண்பனை நினவு கூர்ந்தேன். மேலும் அவனும் எப்போதும் நாவில் குர் ஆன் வசனத்தை உருவிட்ட படியே இருப்பான். இப்போது இந்த பிள்ளை அடைந்த சிறப்பில் நிச்சயம் அவனுடைய பங்களிப்பும், அதை விட மேலாக கணவனின் மரணத்திலும் மனம் தளராமல் இந்த பிள்ளையை குர்ஆனின் பக்கம் ஆர்வம் பட செய்த இந்த பிள்ளையின் தாயின் பங்களிப்பையும் நாம் நினைவு கூறனும். இந்த பிள்ளைக்கு எல்லாவிதமான சிறப்பையும், நல்ல ஆரோகியத்தையும் சிறப்பான வாழ்வையும் அல்லாஹு கொடுப்பானாக.
நமக்கும் நம் பிள்ளைகளை அல்லாஹுன் வார்த்தையான குர் ஆனை படிக்கவும், அதை ஊக்குவிக்கவும் செய்ய கூடிய மனதை தர இறைவனை வேண்டுவோம்.
குறிப்பு: இந்த செய்தியை ரொம்பவும் தாமதமாக வெளியிட்டுள்ளீர்கள்.
14. ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது..! posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[06 January 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15669
மாஷாஹ் அல்லாஹ்...
நான் வழமையாக செய்திகளை ஒரு முறை தான் வாசிப்பது உண்டு, உடனே கமெண்ட்ஸ் தட்டிவிடுவேன்.
ஆனால், இந்த அருமை பிள்ளை ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் உடைய சாதனை செய்திகளை பல முறை வாசித்து வாசித்து மனது பூரிப்பு அடைந்தது. என்ன கமெண்ட்ஸ் எழுத, எப்படி பாராட்ட என்றே புரியவில்லை.
* வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று, அனைத்து சமூகத்திற்கும் உதவிகரமான பிள்ளையாக, இன்னும் பல புகழும், பெருமையும் பெற்று வல்ல அல்லாஹ்வின் கருணையை பெற்றவராக வாழ வாழ்த்துகிறேன்.
* எங்களுடைய பிள்ளைகளையும் இதுமாதிரியான சாதனை குழந்தையாக, மார்க்க வல்லுனராக ஆக்குவாயாக என்று வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.
* இவருக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்தார், ஆசிரியர்கள் மற்றும் அனைவர்களுக்கும் நன்றிகள்.
* நான், ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் உடைய ஊர்காரன் என்று சொல்லுவதில் பெருமைப்படுகிறேன்.
** ஆனாலும், இறுதியில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது, இவரின் தந்தையார் மர்ஹூம் S.N.காஜா சுலைமான் அவர்கள் இதை காண இல்லையே என்று, அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்.
15. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted bynoohu sahib (dubai)[06 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15671
அருமை சஹோதரர் மர்ஹூம் ஹாஜா சுலைமான் அவர்களின் அரும் புதல்வர் முஷ்பிகுர்ரகுமான் அல்ஹாபில் அவர்களின் வெற்றி நமதூருக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் கிடைத்த மா பெரும் அருளாகும் அல்லாஹ் இந்த ஹாபிள் அவர்களின் வாழ்வை பிரகாசமாக்கி அருள் புரிவானாக ஆமீன்.
19. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[07 January 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15687
மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முனைந்த அணைத்து ஹாபிழ் களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த ஹாபிழ்கள் வாழ்வில் இன்னும் பல வெற்றிகளை குவித்திட வால்ல ரஹ்மான் அருள் புரிவானாக - ஆமீன்
இரண்டாம் மூன்றாம் பரிசு பெற்றவர்களின் விபரமும், போட்டோக்களும் இத்தோடு வெளியிட்டிருந்தால் அவர்களையும் கண்டு மகிழ்ந்திருப்போம்.
20. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted byS.A.MUHAMMAD ALI (VELLI) (Dubai)[07 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15691
வெற்றி பெற்ற சகோதரருக்கு மற்றும் வெற்றிக்கு முனைந்த அனைத்து ஹாபிள்களுக்கும் வாழ்த்துக்கள். இதில் பங்கு பெற்ற ஹாபிள் வெள்ளி M.N.கதீஜத்து ஜாஹிரா விற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
21. Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted byAbubacker siddique (Chennai/Mannady)[10 January 2012] IP: 210.*.*.* India | Comment Reference Number: 15809
அஸ்ஸலாமு அலைக்கும்...
வாழ்த்துக்கள். உன்னை போல் ஒருவன் ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
Al-Quran ஓத தெரியாத எத்தனயோ முஸ்லிம் மக்களுக்கிடையில் உன்னுடைய சாதனை மிகவும் பெருமைக்குரியது. உண்மையில் பொறாமையாக வுள்ளது.
நமது சிறப்பு மிக்க அல்-ஜாமிஉல் அஜ்ஹர் பள்ளியை பெருமை படுத்திய உங்களையும் உங்களுடைய குடும்பத்தாரையும் இன்னும் நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் பொருந்தி கொள்வானாக. அமீன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross