அழைப்புப் பணி செய்திட வாகனம் ஒன்று தேவைப்படுவதாகவும், ஆர்வப்படுவோர் இவ்வகைக்காக உதவிடுமாறும், காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோள் பின்வருமர்று:-
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
உங்களுக்கு வேண்டுமா? மறுமைக்கான ஷேர்...?
அன்பின் சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நமது தஃவா சென்டர் கடந்த 15 வருடங்களில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட கிராமங்களில் (தஃவா பணியை) இனிய வாழ்க்கை நெறியாம் இஸ்லாம் மார்க்கத்தை முஸ்லிமல்லாத சகோதர-சகோதரியருக்கு எடுத்துச் சொல்லும் பணியை இறையருளால் செவ்வனே செய்து வந்துள்ளது, அல்ஹம்துல்லாஹ்!
தஃவா சென்டர் தனது தஃவா பணியை தொடங்கியதிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் ஆண்களுக்கான மூன்று நாள் தஃவா மற்றும் பெண்களுக்கான ஒரு நாள் தஃவா (அழைப்புப்) பணிகளை வாடகை வேன் மூலம் மிகுந்த பொருட்சிரமத்துடன் சென்று செய்து வந்தது.
அதன் பின் 2005இல் அல்மஹா கார்கோ நிறுவனத்தைச் சார்ந்த சகோதரர் முஹம்மது அலீ மற்றும் முத்துப்பேட்டை ஹைதர் அலீ ஆகியோர் இலவசமாக தந்துதவிய டெம்போ ட்ராவலர் வாகனத்தில் தஃவா சுற்றுப்பயணங்களை அல்லாஹ்வின் உதவியோடு தொடர்ந்தோம்.
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நமது தஃவா பணிகள் சிறப்பாகவும் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் டெம்போ ட்ராவலர் வாகனத்தை முழுமையாக பயன்படுத்திட முடியாது என வாகன வல்லுனர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
கடந்த மாதம் களக்காட்டில், ரெயில், பேருந்து மற்றும் கார் வாகனங்களைப் பயன்படுத்தி அழைப்புப் பணி செய்துள்ளோம்.
நம்மிடமுள்ள டெம்போ ட்ராவலர் வண்டியின் தேய்மானம் காரணமாக, அவ்வாகனத்தின் உதவியுடன் முன்னர் நடைபெற்ற அழைப்புப் பணிகளில், அது கலந்துகொண்ட சகோதரர்களுக்கு மிகுந்த அலுப்பை ஏற்படுத்தியது.
எனவே, வாகன வல்லுனர்களின் அறிவுரைப்படி தஃவா சென்டா புதிய வேன் வாங்கிட முடிவு செய்யதுள்ளது. இதில் பழைய வேன் விற்று பெறப்படும் தொகை போக இன்னும் ரூ.10,00,000/- தேவைப்படுகின்றது.
தஃவா பணி செய்யது நம் யாவர் மீதும் கடமை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, அப்பணிகளை சிறப்பாக செய்திட புதிதாக வாங்க இருக்கும் வாகனத்திற்கு உதவி செய்வது, இறந்த பின்பும் நன்மையை பெற்றுத்தரும் ஸதக்கத்துன் ஜாரியாவாகும்.
இந்த மிகப்பெரிய நன்மை நூறு நபர்களுக்கு தலா ரூ.10,000/- என்று மறுமைக்கான ஷேர் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் எண்ணற்ற மக்களுக்கு இனிய வாழ்க்கை நெறியாம் இஸ்லாமை எடுத்து சொல்லிய நன்மையை பெற்றிட நீங்கள் தயாரா?
இன்ஷாஅல்லாஹ் மறுமையில் உங்களுக்காக அல்லாஹ் உயர்ந்த ஷேரை தருவான்.
வேன் பயன்பாடுகள்:
1. முஸ்லிமல்லாத மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஆண்கள் பங்கேற்கும் மூன்று நாள் அழைப்புப் பணிக்காக செல்வது...
2. முஸ்லிமல்லாத மக்கள் வசிக்கும் கிராமங்களில் பெண்கள் பங்கேற்கும் ஒருநாள் அழைப்புப் பணிக்காக செல்வது...
3. தர்பிய்யா நிகழ்ச்சிகள் நடத்த செல்வது...
4. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் பெண்கள் சொற்பொழிவுக்கு செல்வது...
5. தாமாக முன்வந்து இஸ்லாமை தம் வாழ்வியலாக்கிக் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஜனாஸா (நல்லடக்க) நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த செல்வது...
6. தாமாக முன்வந்து இஸ்லாமை தம் வாழ்வியலாக்கிக் கொண்ட மக்கள் வசிக்கும் கிராமங்களில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் செல்வது...
இன்னும் பிற நற்காரியங்களுக்காக நமது டெம்போ ட்ராவலர் வாகனத்தை நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
இன்றே உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்! மலக்குமார்கள் உங்கள் பெயரை நல்அமல்களில் பதிவு செய்வார்கள், இன்ஷாஅல்லாஹ்!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவருடைய பாவங்களையும் மன்னித்து, ஈருலகிலும் வெற்றியைத் தந்தருள்வானாக!
இப்படிக்கு
இறைப்பணியில் சகோதர-சகோதரிகள்
தஃவா சென்டர், காயல்பட்டினம்.
தொடர்புக்கு:
+91 98421 77609, +91 91500 50554
மின்னஞ்சல்: ceshkpm@yahoo.com
உங்கள் பார்வைக்காக இன்ஷாஅல்லாஹ் விரைவில் www.cesh.in
இவ்வாறு, காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
TVS ஜக்கரிய்யா,
மேலாளர்,
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்),
காயல்பட்டினம். |