காயல்பட்டினத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு, இன்று நள்ளிரவில் மீண்டும் கனமழை பெய்தது. சுமார் 04.30 மணியளவில் பெய்யத் துவங்கிய மழை, 06.00 மணி வரை நீடித்தது.
இம்மழை காரணமாக, நகரில் மீண்டும் தாழ்வான பகுதிகளிலும், சிமெண்ட் சாலைகளின் ஓரங்களிலும், ஓரமற்ற சிமெண்ட் சாலைகளின் மேற்பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
பருவ மழை ஓய்ந்து, கடந்த பல நாட்களாக வெயில் அடித்து வருகிறது. எனினும் நகரில் குளிர்ந்த வானிலையே நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் (08.01.2012) மாலையிலும், இரவிலும் சில வினாடிகள் மழைச்சாரல் மிகச்சிறிய அளவில் தூறிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
நகர வானிலை (மற்றும் வானவியல்) செய்திகளை உடனுக்குடன் காண www.kayalsky.com இணையதளம் பார்க்கவும்! |