தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 18 ஏழை-எளிய குடும்பத்தினருக்கு, கல்வி, மருத்துவம் மற்றும் சிறுதொழில் தேவைகளுக்காக ரூ.47,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இன்று காலை 08.30 மணியளவில், அவ்வமைப்பின் அலுவலகத்தில் இதற்கென நடைபெற்ற எளிய நிகழ்ச்சிக்கு, வி.பி.ஷம்சுத்தீன் தலைமை தாங்கி, உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை துணைத்தலைவர் முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாலப்பா, துணைச் செயலாளர் ஹஸனாலெப்பை, சட்னி யாஸீன், அஹ்மத் மீராஸாஹிப், ஷஃபீக், இப்றாஹீம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை தலைவர் ஷம்சுத்தீன் செய்திருந்தார்.
Administrator: புகைப்படங்கள் திருத்தம். உதவி பெறுபவர்கள் முகம் - புகைப்படத்தில் - மறைக்கப்பட்டுள்ளது [January 10, 2011 @ 9:00 am] |