மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வுப் பேரணி நடத்த வேண்டும் என்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, 06.01.2012 அன்று (நேற்று) காலையில் மாவட்டம் முழுக்க பேரணி நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில், இராஜாஜி பூங்கா முன்பிலிருந்து துவங்கிய பேரணி, நகராட்சி பழைய அலுவலகத்தில் நிறைவுற்றது. இப்பேரணியை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் துவக்கி வைத்தார்.
காயல்பட்டினத்தில், நகர்மன்ற அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணி, பேரூந்து நிலையத்தில் நிறைவுற்றது. நகரின் அனைத்துப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணியை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா துவக்கி வைத்தார்.
இப்பேரணியில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா, சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், இ.எம்.சாமி ஆகியோருட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதுபோல, கோவில்பட்டி நகராட்சி, தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் சார்பில் நடத்தப்பட்ட பேரணியை ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் துவக்கி வைத்தனர்.
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், எட்டையபுரம், கழுகுமலை, நாசரேத், சாத்தான்குளம், சாயர்புரம், திருவைகுண்டம், உடன்குடி, விளாத்திகுளம், ஆழ்வார்திருநகரி, கடம்பூர், கயத்தாறு, புதூர், கானம், பெருங்குளம், தென்திருப்பேரை ஆகிய பேரூராட்சிகளின் சார்பில் நடத்தப்பட்ட பேரணியை, அந்தந்த பேரூராட்சி மன்ற தலைவர்கள் துவக்கி வைத்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |