காயல்பட்டினம் நகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளான தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தொடர்பு எண்களடங்கிய பிரசுரம் காயல்பட்டணம்.காம் வலைதளத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னர், நகரின் மூன்று ஜும்ஆ பள்ளிகளிலும் இப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. பிரசுரம் பின்வருமாறு அமைந்திருந்தது:-
1. காயல்பட்டனம் டாட் காம்க்கு கோடான கோடி நன்றிகள்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[07 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15676
மக்கள் பயன் அடையும் வகையில் நகராட்சி மன்ற அதிகாரிகள், அலுவலர்கள், தலைவர், உறுப்பினர்களின் தொடர்பு எண்களை சேகரித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் தெரிய படுத்திய - வெளியிட்ட காயல்பட்டனம் டாட் காம்க்கு கோடான கோடி நன்றிகள்..
தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை பணி...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.
3. Many Thanks posted byRiyath (HongKong)[07 January 2012] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 15679
Well done. Fantastic work as usual.
Idea! Maintain this worthfull data with periodic update on website will help people to refer at any time they needed. b'cos the notice paper might lost or details might outdated somedays later. **Wasalam
5. Re:நகராட்சி அதிகாரிகள், அலுவ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[07 January 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15683
காயல்பட்டணம்.காம் - க்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
அனைவர்களுடைய டெலிபோன் நம்பர் கிடைத்து விட்டது என்று சகட்டு மேனிக்கு போன் அடித்து விடாதீர்கள். அவர்களும் மனிதர்களே.. சுக துக்கங்கள் உள்ளன..
அவர்களுக்கு டெலிபோன் தட்டுவதற்கு முன்பு, ஒரு முறை யோசித்து தட்டுங்கள், மணி என்ன ?, இப்போது போன் போட்டால் அவர்களுக்கு சிரமம் இருக்காதே என்று . (தலை போகின்ற அவசரம் என்றால் பரவவில்லை.).
EB உடைய டெலிபோன் நம்பரை தெரிந்து வைத்துக்கொண்டு, கரண்ட் போன மறு நொடியே EB இக்கு கால் பறந்து விடும். கொஞ்சம் கூட பொறுமை கிடையாது. ஒரே விட்டில் இருந்து லேன் லைன், 4 மொபைல் லைன் மூலம் EB யை தொடர்பு கொண்டு, லைன் பிஸி ஆக இருந்தால், உடனே வசவு வேறு.. பாவம் EB காரர்கள். (ஒரு வீட்டில் இருந்து 5 கால் என்றால், மொத்த வீடுகளில் இருந்து எத்தனை கால்கள்..)
** ஒரு சின்ன பொது அறிவு..(இந்த செய்திக்கு தொடர்பு இல்லாதது).
நம் வீடுகளில் இரவில் கரண்ட் கட் ஆனால், செய்யக்கூடிய முதல் செயல் என்ன.?
முதல் வேலை " ஓடிப்போய் பக்கத்துக்கு வீட்டில் கரண்ட் இருக்கின்றதா " என்று பார்ப்பது தான் .. பக்கத்துக்கு வீட்டிலும் கரண்ட் இல்லை என்றால்தான் நிம்மதியோ, நிம்மதி.
அவர்கள் வீட்டில் மட்டும் கரண்ட் இல்லை என்றால், அவ்வளவு தான்.. புலம்பலோ புலம்பல்.
8. Re:நகராட்சி அதிகாரிகள், அலுவ... posted bymackie noohuthambi (kayalpatnam)[07 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15694
மிகவும் பிரயோசனமான சேவை. நகரமன்ற தலைவர், நகரமன்றதின் மின்னஞ்சல்களையும் அறியத்தாருங்கள்.
உங்கள் நோட்டீஸ் ஊர் மக்களை உசுப்பிவிட்டுள்ளது. இனிமேல் அதிகாரிகள் அசட்டையாக இருக்க முடியாது. செல்போன்களை சுவிச் ஆப் செய்துவிடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. எனினும் நம்பிக்கைதான் வாழ்க்கை. நல்லதே நடக்க பிரார்த்திப்போம் பிரார்த்திப்போம்.
10. Re:நகராட்சி அதிகாரிகள், அலுவ... posted byAbdul Cader S.H. (Jeddah)[07 January 2012] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15700
நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தொடர்பு எண்களடங்கிய பிரசுரம் வெளிட்டமைக்கு நன்றி!
இந்த எண்களையும், இன்னும் காயல் முக்கியஸ்தர்களின் எண்கள், மருத்துவமனைகள், வங்கிகள், ரயில்நிலையங்கள், தபால் அலுவலகம், தொலைபேசி அலுவலகம், இதுபோன்ற எண்கள் நிறைந்த ஒரு பகுதியை Website Menu வில் தந்தால் வெளிநாடு வாழ் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே! அட்மின் செய்வீர்களா?
Administrator: Thanks for your suggestion. It would be done soon - Insha Allah
12. Re:நகராட்சி அதிகாரிகள், அலுவ... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[07 January 2012] IP: 110.*.*.* India | Comment Reference Number: 15704
ஹ்ம்ம்... பார்த்து சகோதர சகோதரிகளே மிஸ்டு கால் கொடுக்காமல் இருந்தால் சரி.
அதிக அளவில் மிஸ்டு கால் கொடுக்கும் நாடு இந்தியா தான். ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை சீனாவை மிஞ்சி விடும்.
ஒரு குறுஞ்செய்தி: Telecom ஆபரேட்டர்கள் தங்களது தொலைதொடர்பை பயன்படுத்த சந்தாதாரர்களாகிய நம்மிடம் இருந்து பணம் பெற்றுகொள்கிறார்கள் நாம் கால் செய்யும் பொது. அனால் மிஸ்டு கால் மற்றும் கால் செய்யும் பொது Connecting Charge என்று ஒன்று உண்டு. இதை அவர்கள் மிஸ்டு கால் கொடுத்தாள் பெற முடியாது. இந்தியாவின் தொலைதொடர்பு இன்னும் அந்தரத்தில் தொங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். அப்புறம் ராஜா பற்றி தான் உங்களுக்கு தெரியுமே.
13. Re:நகராட்சி அதிகாரிகள், அலுவ... posted byT,M,RAHMATHHULLAH-04639.280852 (ka)[07 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15706
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஷபாஹ் கேப்பீ எம் டாட் காம்.
சில நேரத்திலே ரெம்ப நல்ல, நல்ல செய்திகளை தருகிறீர்கள். .இந்த நகராட்சியர் போன் லிஸ்ட்டை தந்தது நல்ல ஒரு பெரிய காரியம். நானும் பத்து வருஷமா தேடியது.தான். கம்ப்யூட்டர் வகைகளுக்கு செலவழித்த பிரயோஜனம் இப்பத்தான் நல்லது என தெரியுது...
இருந்தாலும் இதுபோல், அரசாங்க அலுவலர்கள் அனைத்தையும் தந்தால் நீண்டகால நன்மையை பெற்றுத்தரும்.
கொஞ்சம் பெரியவர்களை நினைவில் கொண்டு 14 -16 போயிண்ட் டைப் செட்டில் எழுதினால் ஜெராக்ஸ் எங்கேயும் உடனடி யாக எடுக்கலாம் இல்லாவிடில் என்லார்ஜ் ஜேராக்ஸ் கம்பனியே தேடி அலையணும். இருந்தாலும் இப்ப உள்ள நகர்ரட்சி லிஸ்ட் காப்பியை A3 சைசில் என்லார்ஜ் ஜெராக்ஸ் எடுத்து பொது இடங்களில் போடலாம்.
இன்னுமொரு வேண்டுகோள் எல்லா செல் ஓனர் ஒரு விப்பம் தெரிவித்தால் மேல்படி நம்பரும் தந்த்தால் லிஸ்ட் பன்னலாm ஒரு ஐந்து(பத்து) ரூபாயாவது சார்ஜ் பண்ணுங்கோ.ஓக்கே
Moderator: இப்பிரசுரம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நமதூரின் அனைத்து ஜும்ஆக்களிலும்
வினியோகிக்கப்பட்டுள்ளது. இன்ஷாஅல்லாஹ் வீடு வீடாகவும் வினியோகிக்க ஆவன செய்யப்படும்.
14. அவசியம் ஏற்படும் பொழுது இவைகளை செயல் படுத்தினாலும் நல்லது....நன்மையும் கூட... posted byசட்னி .செய்யது மீரான் (ஜித்தா,,சவுதி அரேபிய )[07 January 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15712
அஸ்ஸலாமு அலைக்கும்...
இது மிகவும் பிரயோசனமானது தான்....
வெற்றி பெற்ற உடனேயே அந்தந்த மாநகராட்சியின்
உறுப்பினர்களின் புகைப்படத்தோடு
அவர்களின் வீட்டு முகவரியோடு
இது போன்று செல் எண்ணையும் முழுமையாக
தினகரன் செய்திதாளில் வெளியிட்டு இருந்ததும்
நாங்கள் திருச்சி,சென்னை பதிப்புகளில்
பார்க்க நேர்ந்தது...அது போன்று அப்பொழுதே நீங்கள் இதனை எங்களுக்கு அறிய தருவிர்கள் என்று மிக்க ஆவல்
கொண்டு இருந்தோம் சுனக்கமாக வந்தாலும்
சூப்பர் ஆக வந்துள்ளது மிக்க நன்றி.......
மிஸ் கால் அடிப்பார்கள் என்ற பயமோ,வீணான சந்தேகமோ,
தேவையற்ற புள்ளி விபர பட்டியலோ வேண்டாம்......
எல்லோரும் எல்லாம் அறிந்தவர்களாக தான் உள்ளார்கள்...
என் அன்பான வேண்டுகோள்.......
நமது ஊருக்கு அருகில் உள்ள தீ அணைப்பு துறை,
காவல் நிலையம்,ஆம்புலன்ஸ்,நுகர்வோர் ,
உணவு வழங்கல்,மற்றும் இது சம்பந்தமான,
அவசர அவசிய தொடர்பு விபரங்களை
தெரிய படுத்தினாலும் மிகுந்த உதவியாகும்....
அது போன்று நம் மக்கள்களும் இதனை பாதுகாத்து,பத்திரப்படுத்தியும்.
அவசியம் ஏற்படும் பொழுது இவைகளை செயல் படுத்தினாலும் நல்லது....நன்மையும் கூட.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross