கடந்த 13.12.2011 அன்று காலமான, காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவரும், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளருமான ஹாஜி பி.மஹ்மூத்,
கடந்த 17.12.2011 அன்று காலமான - காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இவ்விருவரும் தலைவராகவும், துணைத்தலைவராகவும் அங்கம் வகித்த அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில் 21.12.2011 புதன்கிழமை பின்னிரவு 08.00 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
முத்துச்சுடர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.ஜே.நூஹுத்தம்பி கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர், மறைந்தவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினர்.
ஹாஜி எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான் நன்றி கூற, ஹாஃபிழ் என்.டி.சுலைமான் துஆ இறைஞ்சலுடன் கூட்டம் நிறைவுற்றது. முன்னதாக, மறைந்தவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
தகவல்:
ஹாஃபிழ் S.A.முஹம்மத் இஸ்மாஈல்,
சுலைமானிய்யா கார்ப்பரேஷன்,
பிரதான வீதி, காயல்பட்டினம். |