நாளை (ஜனவரி 10) காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.
காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. Re:நாளை (ஜனவரி 10) மாதாந்திர... posted byK S Muhamed shuaib (Kayalpatnam)[09 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15767
தினமும் ஆறுமணி நேர மின்தடையால் மக்கள் வேதனைப்பட்டு நொந்து சாகிறார்கள். இந்த லட்ச்சனத்தில் மாதாந்திர பராமரிப்புவேறு.
நான் நினைக்கிறேன் இது மாதாந்திர பராமரிப்பும் அல்ல.ஒரு மண்ணாங்கட்டியும் அல்ல. அந்த சாக்கில் இன்னும் கொஞ்ச நேரம் மின்தடையை கூடுதலாக ஏற்படுத்தி அரசாங்கத்தில் நல்ல பேர் வாங்க நினைக்கும் அதிகார வர்க்கத்தின் செயலாக கூட இருக்கலாம்.
அதற்காக நண்பர் பி. எஸ். அப்துல் காதர் அவர்கள் சொல்வது போல கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரிப்பதும் தவறு. அது நமது தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொண்டது போல.
அணுமின் உலை பற்றி நண்பர் பி. எஸ் தெரிந்துதான் சொல்கிறாரா? முப்பாதாயிரம் ரூபாய் செலவிட்டு மூன்று பைசாவுக்கு மின்சாரம் தருவோம் என்கிறாரே நமது பிரதமர ...இது அறிவு பூர்வமானதா...?
சோவியத் யூனியனில் செர்நோபில் அமெரிக்காவின் மூன்று மைல் தீவுகள் இவைகளில் ஏற்ப்பட்ட பேரழிவுகள் போபாலில் ஏற்ப்பட்ட சகிக்கமுடியாத கொடூரம் சமீபமாக ஜப்பான் புகுசிமாவில் ஏற்ப்பட்ட அணுஉலை விபத்து இவைகளை பார்த்த பிறகுமா நண்பர் பி. எஸ் அணு உலைக்கு வக்காலத்து வாங்குகிறார்...?
இது பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
8. Re:நாளை (ஜனவரி 10) மாதாந்திர... posted byS.H. MOHAMED NIYAS (Kayalpatnam)[09 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15774
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாதாந்திர மின்தடை இணையதளத்திலும், பத்திரிக்கையிலும் பார்க்கின்றோம். இணையதளத்தை பார்க்கின்றவர்கள் வசதி உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். பத்திரிக்கையில் கூட ஏதோ ஒரு பகுதியில் கண்ணுக்கு தெரியாத தூரத்தில் இதுபற்றி அறிவிப்பு வருகிறது. பத்திரிகை படிப்பவர்கள் கூட சிலநேரம் படிக்காமல் விட்டுவிடுகிறோம். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு முன்னே ஒரு போர்டில் மாதாந்திர மின்தடை நாள் குறித்து அறிவிப்பை எழுதி வைக்கலாம். இந்த முறையை பொது நல அமைப்புகள் எல்லா பள்ளிவாசல்களுக்கும் முன்னதாக தெரிவித்தால் பொது மக்கள் நலன் அடைவார்கள்.
எழுத்தாளர், ஓவியர்,
ALS மாமா,
ஆலோசகர் - ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக் குழு,
முஹம்மது நியாஸ்,
தாயிம் பள்ளி துணை செயலாளர்,
KTM தெரு ,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross