காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவிலிருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது. அதிகாலை 06.00 மணியளவில் ஓய்ந்த மழை, சில நிமிடங்களில் மீண்டும் சிறுமழையாகத் துவங்கி காலை 10.30 மணி) வரை பெய்தது.
காலை 11.00 மணி முதல் நகரில் வெயில் தென்பட்டது. எனினும், குளிர்ந்த வானிலையே நிலவி வருகிறது.
நகர வானிலை (மற்றும் வானவியல்) செய்திகளை, www.kayalsky.com வலைதளத்தில் உடனுக்குடன் காணலாம்.
2. Re:நள்ளிரவு முதல் கனமழை!... posted byMauroof (Dubai)[11 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15827
சகோ. FAIZAL ISMAIL மன்னிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வன்னம் இந்தியாவில் எங்குமே போதிய வழிமுறைகள் அந்தந்த பகுதி நிர்வாகங்களால் செயல்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான சாலைகள் தரமானதாகவும் இல்லை. இருந்த போதும் நமதூர் மக்களில் பலர் தனது வீட்டின் முன்பு தண்ணீர் தேங்கி விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காக வீட்டின் முன்புறம் மற்றும் சிறு சிறு சந்துக்களில் கல்/மணல் மேடுகளை செவ்வனே அமைத்து "நமக்கு நாமே திட்டம் (கெடுதல்)" என்ற ரீதியில் செயல்பட்டு சிரமங்களை மெருகூட்டும் கொடுமையை யாரிடம் போய் சொல்வது?
இவ்வாறு செய்யும் மக்களிடம் சற்று மென்மையாகவே இதன் தீமை குறித்து எடுத்து சொன்னாலும் சரியே, அடி கொடுக்காத குறையாக பெண்களும் ஆண்களும் சொல்பவரிடம் தர்க்கம் செய்வார்கள். இதில் எனக்கு நன்றாகவே அனுபவம் உண்டு, ரொம்ப நல்லாவே கேட்டிற்காங்க.
3. Re:நள்ளிரவு முதல் கனமழை!... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[11 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15835
மழை நீர் வடிகால் அமைப்பு இந்தியாவில் எங்குமே சரியாக செயல்படுத்த படவில்லை என்ற சகோதரர் மஹ்ரூபின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர் கேரளாவில் சென்று பார்க்கட்டும். எவ்வளவு மழை பெய்தாலும் ரோட்டில் ஒரு சொட்டு நீர் தேங்காது.
நமது தமிழ் நாட்டிலேயே மழை நீர் தேங்காத எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன.
நமது பகுதியில் அரசு போடும் ரோடு அந்த லட்சணத்தில் இருக்கிறது.
சாலைகளை போடும் போதே சரியாக போடாமல் ஏனோ தானோ என்று போடுவதால் சிறிது காலம் சென்ற பிறகு அந்த சாலைகளில் பள்ளம் விழுந்து விடுகிறது.
மேலும் குடிநீர் லைனுக்குக்காக ரோட்டை தோண்டுபவர்கள் அதை சரியாக மூடாமல் மேலோட்டமாக மண்ணை போட்டுவிட்டு போய்விடுகிறார்கள்
இதெல்லாம்தான் தெருக்களில் நீர் தேங்க காரணம்.
4. Re:நள்ளிரவு முதல் கனமழை!... posted byNowshad (YERCAUD)[11 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15839
முஹமது சுஹைப் கேரளாவின் அமைப்பு மேடுபள்ளம் நிறைந்தது அதனால் தண்ணீர் தங்குவதில்லை நமதூருக்கு கேரளாவை ஒப்பிடவேண்டாம்.அந்தமாநிலம் இயற்கையாக அமைந்தது மலைபகுதி மற்றும் அழப்பகுதி அதான் மலை + ஆழம்
5. Re:நள்ளிரவு முதல் கனமழை!... posted byVilack SMA (kayalpatnam)[11 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15840
தம்பி Fasi Ismail சொல்வது சரிதான் . நகரமன்ற நிர்வாகம் அந்த அளவில்தான் உள்ளது . பொதுவாக ,எங்கள் பகுதி பெண்களிடம் விசாரித்ததில் , தேர்தல் நேரத்தில் , இப்போது பதவியில் இருப்பவர்கள் நிறைய வாக்குறுதிகள் தந்தார்களாம் . ஆனால் எதையும் நிறைவேற்றுவதாக தெரியவில்லை என்கிறார்கள் . குறிப்பாக தெருவில் தேங்கும் மழைநீர் பற்றித்தான் அனைவரும் குறை கூறினார். எப்படி சமாளிப்பாரோ இந்த தலைவி !
6. கரை உள்ளது ஓடையை காணோம் posted byS.A.Muhammad Ali (Dubai)[11 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15842
நமது ஊர் நல்ல கட்டமைப்புடன் தான் அந்த காலத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் சில தனி நபர்களால் பொது சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தற்போது நாம் காணக்கூடிய காட்சிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.
மூப்பனார் ஓடை என்ற ஒன்று நமது ஆராம்பள்ளி எதிரில் இருந்து (K.T.M. தெருவிற்கும் நெசவு தெருவிற்கும் நடுவில் ) தாயிம்பள்ளியின் பின்புறம் வழியாக ஹாபில் அமீர் பள்ளி வழியாக K.M.T. Hospital ஐ ஒட்டி மெயின் ரோடு கடந்து ஓடக்கரை வழியாக கடலில் கலக்கும். தற்போது தயிம்பள்ளியின் பின்புறம் சிறிது தூரம் மட்டுமே இந்த ஓடை கண்ணுக்கு தென்படுகிறது.
மீதி இடங்கள் எல்லாம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் போக வழி இல்லாமல் தேங்கி கடந்து சாலைகள் எல்லாம் பழுது ஆகிறது. நோய் பரவுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் சரி செய்யுமா? மூப்பனார் ஓடையின் அளவு 10 அடி. குறைந்த பட்சம் தண்ணீர் செல்லும் அளவுக்காவது ஆக்கிரமிப்பை அகற்றி நோய் பரவாமல் தடுக்குமாறு வேண்டி கொள்கிறேன்.
தற்போது மூப்பனாரும் இல்லை ஓடையும் இல்லை ஓடக்கரை மட்டுமே உள்ளது.
7. Re:நள்ளிரவு முதல் கனமழை!... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[12 January 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15848
சகோதரர் Vilack SMA அவர்களுக்கு தற்போதைய நகர்மன்ற தலைவி மீது அப்படி என்ன விரோதமோ தெரியவில்லை.
சகோதரர் Vilack SMA அவர்கள் எதோ கடந்த மூன்று மாதங்களாகத்தான் நகரில் மலை பெய்வது போலவும், கடந்த மூன்று மாதங்களாகத்தான் மழைநீர் நகரில் தேங்குவது போலவும் கருத்துகூரிவுள்ளார்.
<<<<<< இப்போது பதவியில் இருப்பவர்கள் நிறைய வாக்குறுதிகள் தந்தார்களாம். ஆனால் எதையும் நிறைவேற்றுவதாக தெரியவில்லை என்கிறார்கள் . குறிப்பாக தெருவில் தேங்கும் மழைநீர் பற்றித்தான் அனைவரும் குறை கூறினார்.>>>>>
சகோதரர் Vilack SMA அவர்களுக்கு, தாங்கள் கூறும் தெருவில் நீர் தேங்க யார் காரணம்? சாலைகள் சரியாக அமையாதமைதானே?
சாலைகள் எந்த நகர்மன்றத்தில் போடப்பட்டது? கொஞ்சம் சிந்தியுங்களேன்? எதெற்கெடுத்தாலும் நகர்மன்ற தலைவி என்றால் என்ன அர்த்தம்?
தலைவர் பதவி ஏற்ற உடன் மூன்று மாத காலத்தில் இதை செய்ய முடியும் என்று தாங்கள் கருதினால், கடந்த நகர்மன்றம் என்ன செய்தது?
8. குத்தும் விளக்கு posted byS.A.Muhammad Ali (Dubai)[12 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15855
சகோதரர் விளக்கு செய்யது முஹம்மது அலி அவர்களுக்கு நகராட்சி மன்ற தேர்தலில் தனது விருப்பம் நிறைவேறாத வருத்தம் அவரது கருத்துக்களில் ஆழமாக தெரிகிறது.
அதற்காக சும்மா குறை கூற வேண்டும் என்று எதையாவது எழுதாமல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க கூடிய நல்ல கருத்துக்களை எழுதினால் நகர்மன்றம் பரிசீலிக்கும். உங்கள் வார்டு உறுப்பினருக்கு உங்கள் தெருவில் உள்ள பிரச்சனைகள் அதற்குரிய தீர்வுகள் பற்றி கோரிக்கை வைக்குமாறு கூறவும்.
நீங்கள் குத்தும் விளக்காக இல்லாமல் நல்ல குத்து விளக்காக இருந்து பிறருக்கும் ஒளி கிடைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் அமைய வாழ்த்துகிறேன்.
9. Re:நள்ளிரவு முதல் கனமழை!... posted byCnash (Makkah )[12 January 2012] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15856
விளக்கு அலி காக்கா, நீங்க ஊரில் தான் இப்போ இருங்கீங்க போல அப்டியே ஒரு நடை நடந்து தலைவியை சந்தித்து உங்கள் இருவருக்கும் உள்ள நீண்டகால பிரச்சனையை பேசி தீர்த்து ஒரு சுமூக முடிவுக்கு வாங்களேன்!! அப்படியே பொது பிரச்சனையாகிய, மழைநீர் தேங்குறது, குடிதண்ணீர் பிரச்னை, ஒன் வே பிரச்னை என்று 3 நிமிடத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனையை 3 மாதங்களா ஏன் தீர்க்காமல் இருக்கிறார்கள் என்பதை கேட்டறிந்து, அப்படியே 3 நிமிடத்தில் தீர்க்கும் மந்திரத்தையும் கொஞ்சம் சொல்லிகொடுங்கள்! ப்ளீஸ்!!
அப்புறம் ஊரில் பவர் கட் அதிகமா இருக்கிறது, DCW தொல்லை, பரவும் கொடிய கேன்சர், ஊரில் விலையேற்றம், கூடங்குளம் திட்டம், இதையும் சேர்த்து நாம் ஒட்டு போட்ட மக்கள் அனுபவித்து வருகிறோம்!! இதற்கும் தலைவிதான் காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறன்!! அதற்க்கும் ஒரு ஒரு முடிவு காட்டுங்கள்!!
10. Re:நள்ளிரவு முதல் கனமழை!... posted byVilack SMA (kayalpatnam)[12 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15873
அஸ்ஸலாமு அழைக்கும் .
Response to comment 15848 , 15855 & Mr .Cnash
பொதுவாக , எந்த ஒரு ஆட்சியிலும் தவறு ஏற்படும்போது , அதன் தலைமையைத்தான் குறை கூறுகிறோம். அம்மா ஆட்சி சரியில்லை , அய்யா ஆட்சி சரியில்லை என்று சொல்கிறோமே தவிர , ஒருபோதும் இவர்களுடைய , மந்திரிமார்களின் பெயரை சொல்லியோ , அதிகாரிகள் பெயரை சொல்லியோ குறை கூறுவதில்லை . அம்மாவையும் , அய்யாவையும் குறைகூறுவதால் , நமக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினையோ என்று நினைத்தால் , இதை என்னவென்று சொல்வது ?
நான் சொன்ன குறைகள் , 3 மாதமாக நடக்கும் பிரச்சினை இல்லை . 3 தலைமுறைகளுக்கும் மேலாக நடக்கும் பிரச்சினை. இதற்கு முன்பாக இருந்த தலைவர்கள் , உறுப்பினர்களின் கவனத்திற்கு , ஒருசில குறைகளை சொல்லியும் இருக்கிறேன் . ஆனால் , இப்போது போன்ற இணையதளங்கள் அப்போது இல்லையாதலால் , நம்முடைய ஆதங்கங்கள் வெளியே தெரியாமல் போயிற்று . ஆகையால் என்னுடைய கருத்துக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் , 3 நிமிடத்தில் மந்திரம் ஓதுவது எப்படி ? இவருக்கும் அவருக்கும் சண்டையா ? இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கவும் .
11. ரோட்டுரிமை மீறினால் சட்ட நடவடிக்கை posted byAarif O.L.M (Lanka)[15 January 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 15955
மழைநீர் தேங்குவதுக்கு குறுக்குத்தெரு உதாரணம். பாயிஜின் சங்கத்திலிருந்து சிருனைனார் பள்ளி வரை ரோட்டில நீண்ட காலமா குமிந்திருக்கும் மண்ணை சேகரித்தால் பல வீடுகள் கட்டி விடலாம்.
ரோட்டுரிமையை மதிக்காத நபர்களுக்கு அபராதம் என்ற முறையை நமதூரில அமுல் படுத்தினால் கான்க்ரீட் ரோடு நீட்டா இருக்கும், மழை நீரும் தேங்காது, முடுக்குகளும் லெவலாக இருக்கும்.
யார் வீட்டுக்கு முன்னாள் ஒரு குறிப்பிட்ட தினங்களுக்குள்ள மண் அள்ளி ரோட்டை கிளியர் செய்ய வில்லையோ " பைன், அல்லது சட்ட நடவடிக்கை " எடுக்கணும்.
கேஸ் முடியும் வரை stay . அப்போதாவது வீட்டுக்காரனுக்கு, மேஸ்திரிக்கு அல்லது மேற்பார்வைக்கு நிற்க்கும் நமது சொந்தங்களுக்கு பொழப்பு மேல பயம் வரும்.
This may sound harsh. But for " Singara Kayal " this is the only solution to control our stubborn native brothers.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross