நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள் வினியோகத்தில் புகார்கள் எதுவுமிருப்பின் கைபேசி குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உணவுப் பொருட்கள் வினியோகம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
அக்கூட்டத்தில், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு, அவர்களது புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க வசதியாக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநில நுகர்வோர் சேவை மையத்தை, 729998002 மற்றும் 7280018002 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனவும்,
உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையாளர் பஷீர் அகமதுவை 94454 64748 என்ற எண்ணிலும் தொடர்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
V.M.S.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
நகர்மன்ற 02ஆவது வார்டு உறுப்பினர்,
காயல்பட்டினம் நகராட்சி. |