தமிழகத்தின் - கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதுதான் விருதாச்சலம் நகரம். 60,000 மக்களுக்கும் மேற்பட்டோர் வாழும் இவ்வூர் ஒரு முதல் நிலை நகராட்சியாகும்.
2001ஆம் ஆண்டு இந்நகராட்சியின் தலைவராக மக்களால் நேரடியாக தேர்வுசெய்யப்பட்டார் டாக்டர் மு.வள்ளுவன். இவரது ஐந்தாண்டு பதவிக் காலம் குறித்து, “சாதி நேர்மையால்” (ACHIEVE BY HONESTY) என்ற ஆவணப்படம் (Documentary) வெளியிடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 2 மணி நேரம் நீளம் கொண்ட இப்படம் - kayal.tv இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப காயல்பட்டணம்.காம் ஏற்பாடு செய்துள்ளது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இன்றும், நாளையும் (ஜனவரி 14), நாளை மறுதினமும் (ஜனவரி 15) பலமுறை ஒளிபரப்பப்படுகிறது.
அதுபோல, மற்றொரு உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான Abish TVயில், 15.01.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.30 மணிக்கும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. |