காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள காக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 300 நோயாளிகளுக்கு குருதிக்கொடை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உதிரம் கொடுப்போம்,உயிர் காப்போம்.
உதவிகள் செய்வோம், உயர்வு பெறுவோம். (அல்லாஹ்விடத்தில்)
அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த ஒரு வருட காலமாக சிறப்பான முறையில் நமதூரில் செயல்பட்டுவரும் காக்கும்கரங்கள் நற்பணி மன்றம் 06/01/2012 முதல் அரசு பதிவு பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் அரசு பதிவு எண்:4/2012.
கடந்த ஒரு வருட காலத்தில் சுமார் முன்னூறுக்கும் அதிகமானோர்களுக்கு எமது அமைப்பின் உறுப்பினர்கள் மூலமாகவும், எங்களுடைய அமைப்பின் ஆதரவாளர்கள் மூலமாகவும் அல்லாஹ்வின் உதவியால் இரத்தம் கொடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த மாதம் முதல் புதிய இணையதளம் துவங்கி அதன் மூலம் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளைச் சார்ந்த புதிய உறுப்பினர்களை சேர்த்து நமதூரில் மட்டும் அல்லாது எங்கே இருந்து இரத்தம் கேட்டாலும் அந்த ஊரை சார்ந்தவர்களைக் கொண்டே கொடுக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம்.
மேலும் இறை இல்லங்களை (பள்ளி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில்) தூய்மைப்படுத்தும் பணிகளிலும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுவருகிறோம். அதேபோல் ஊரில் உள்ள எந்த பொது நல அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் அவர்களின் அழைப்பின் பேரில் நாங்களும் உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறோம். மரங்கள் நட்டு வருகிறோம். மேலும் எங்களுக்கு சந்தா, நன்கொடை என்று எதுவும் வசூலிக்காத நிலையிலும் ஏழைகளுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவிகளையும் செய்து வருகிறோம்.
எங்களுடைய நீண்ட கால கனவான "இரத்தவங்கி" நமதூரில் துவங்குவது சம்பந்தமாக முயற்ச்சிகள் எடுத்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ். எங்களுடைய இந்த எண்ணங்கள் நிறை வேறவும், இதையெல்லாம் நாங்கள் செய்வதற்கு எங்களுக்கு நல்ல சரீர சுகமும், ஆரோக்கியமும் கிடைப்பதற்கும் வல்ல நாயன் அல்லாஹ்விடம் துஆ கேட்பதுடன், நாங்கள் சிறியவர்கள். எங்களுக்கு உங்களுடய நல்ல ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் எங்களுக்கு தருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வல்ல ரஹ்மான் அல்லாஹ் நம்முடைய ஹலாலான நாட்ட, தேட்டங்களை நிறைவேற்றி தருவானாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.
இவண்:
எம்.ஏ.கே.ஜெயினுல் ஆப்தீன்,
தலைவர்,காக்கும்கரங்கள் நற்பணி மன்றம்.
reg.no:4/2012
109,ஜரிபா பிளாசா,கடைப்பள்ளி எதிர்புறம்.
ஸீ.கஸ்டம்ஸ் ரோடு, காயல்பட்டணம்.
cell :+919842365912(zainulabdeen)
landphone:+919364239725(office)
email id:zainulanwari@gmail.com
safehandswelfare@gmail.com
இவ்வாறு, காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |