சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியான கே.எம்.டி.சுலைமானை அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சந்தித்து முக்கிய கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, செயற்குழு உறுப்பினர் ரப்பானீ, உறுப்பினர்களான முஹ்ஸின் தம்பி, அப்துர்ரஹ்மான், எஸ்.ஐ.பாக்கர் ஸாஹிப், செய்யித் முஹ்யித்தீன் ஆகியோர் தமது விடுமுறையில் காயல்பட்டினம் வந்துள்ளனர்.
09.01.2012 அன்று காலை 11.00 மணியளவில், தம் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியான கே.எம்.டி.சுலைமானை அவரது வணிக நிறுவனத்தில் சந்தித்த அக்குழுவினர், கல்வி - மருத்துவம் - சிறுதொழில் ஆகிய தேவைகளுக்காக ஏழை - எளிய மக்களுக்கு அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவித்தொகைகள் வினியோகிக்கப்பட்ட விபரம், மன்றத்தால் செய்யப்பட்டு வரும் நலத்திட்ட உதவிப் பணிகள், அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டம், திருக்குர்ஆனை மனனம் (ஹிஃப்ழு) செய்து முடிக்கும் ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல் உள்ளிட்டவை குறித்து விரிவாக கலந்தாலோசனை செய்தனர்.
உள்ளூர் பிரதிநிதியிடம் பெற்ற விபரங்களை, வரும் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக சமர்ப்பிக்க்வுள்ளதாக அம்மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னாலெப்பை அப்போது தெரிவித்தார். |