காயல்பட்டினத்தில் பெரும்பாலான தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க கடந்த நகர்மன்றத்தில் டெண்டர் விடப்பட்டு, தூத்துக்குடியைச் சார்ந்த ரம்போலா என்பவருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் கீழநெய்னார் தெரு, சித்தன் தெரு, அலியார் தெரு, விசாலாட்சியம்மன் கோயில் தெரு, சதுக்கைத் தெரு, மருத்துவர் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் சிமெண்ட் சாலை ஆமை வேகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தரை மட்டத்திலிருந்து சுமார் ஒரு அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சிமெண்ட் சாலைகளால், இரு சக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்த வாய்ப்பற்றுப் போயுள்ளது.
அத்துடன், இச்சாலையின் ஒருபுறத்தில் ஒரு வாகனம் வந்தால், மறுபுறத்தில் வரும் வாகனம் செல்ல வழியில்லாமல், வந்த வழியே திரும்பிச் செல்லும் அவலம் அன்றாடக் காட்சியாகிவிட்டது.
காயல்பட்டினம் சித்தன் தெருவில் 2011 டிசம்பர் மாதத்தில் (கடந்த மாதம்) அமைக்கப்பட்ட சாலையின் இரு புறத்திலும் செங்கற்கள் கொண்டு ஓரம் அமைக்கப்பட்டது.
அடுத்த சில தினங்களிலேயே அவை பெயர்ந்து, சாலையோரங்களில் சிதறிக்கிடக்கும் காட்சி:-
|