குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவரவர் குடும்ப அட்டைகளில் 2012ஆம் ஆண்டிற்கான பதிவுத்தாள் இணைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், குடும்ப அட்டையில் புதிய பெயர்களை சேர்த்தல், இருக்கும் பெயர்களை திருத்தம் செய்தல் ஆகியவற்றை 2012 ஜனவரி 01 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அந்தந்த கடைகளில் செய்துகொடுக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதன் பேரில், காயல்பட்டினத்திலுள்ள கடைகளில் மேற்படி பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பதிவுப் பணிகளுக்கிடையில், நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருள் விற்பனையும் நடைபெற்று வருவதால், பணிகளில் சிரமம் ஏற்படுவதைக் கண்ணுற்ற அந்தந்தப் பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள், நியாய விலைக்கடைகளின் அலுவலர்களுடன் இணைந்து தன்னார்வ அடிப்படையில், பதிவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காயல்பட்டினம் தாயிம்பள்ளியருகேயுள்ள நியாய விலைக்கடையில், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் ஆகியோர், கடை அலுவலருக்கு உதவியாக பதிவுப்பணிகளை மேற்கொண்ட காட்சி:-
|