காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஐம்பெரும் விழாவாக ஜனவரி 13 (நேற்று) முதல், ஜனவரி 15 (நாளை) வரை காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் நடைபெறுகிறது.
முதல் இரு தினங்களான நேற்றும், இன்றும் பெண்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில் சன்மார்க்க நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் மனனம், தஃப்ஸீருல் குர்ஆன், வினாடி-வினா (Aroos Quiz), பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
நாளை இறுதி நாள் நிகழ்ச்சிகள் ஆண்கள் பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கென புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தின் முன்புறமுள்ள சாலையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 09.15 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு மார்க்க அறிஞர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சி மதியம் வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 04.30 மணிக்குத் துவங்கி, இரவு வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில், தஃப்ஸீருல் குர்ஆன் குறுந்தகடு வெளீயீடு, மாணவியருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா‘, ஹாஃபிழா பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளனைத்தும், www.kayal.tv (காயல்.டிவி) வலைதளத்தில் நாளை காலை முதல் நேரலை செய்யப்படவுள்ளது. இங்கே சொடுக்கி, நேரலையைக் காணலாம்.
தகவல்:
கல்லூரி நிர்வாகம் சார்பாக,
A.L.நிஜார்,
விழாக்குழு பொறுப்பாளர்,
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி,
தீவுத்தெரு, காயல்பட்டினம். |