சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 62ஆவது செயற்க்குழு கூட்டம் 13.01.2012 வெள்ளிக்கிழமை மாலை, மன்றத் தலைவர் சகோ. குளம் அஹ்மது மெய்தீன் இல்லத்தில் நடந்தேறியது. கூட்டத்திற்கு சகோ.எம்.எம்.மூஸா சாகிப் தலைமை தாங்க, சகோ.எம்.என். மஹ்மூத் லஹாக்; இறைமறை ஓத, கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்தின் தலைவர் நல்ல பல கருத்துகளை உறுப்பினர்களுக்கு அறிவுரையாகத்தர, தொடர்ந்து வரவேற்புரையை சகோ. வங்காளம்.எம்.என்.முஹம்மது அனஸுத்தீன் நிகழ்த்திட, நிதிநிலை அறிக்கையை சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் கல்விக்கென ஒதுக்கிய பிறகு தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தா, பற்றி விபரங்களை துல்லியமாக எடுத்துரைத்தார்.
மன்றசெயல்பாடுகள்:
அண்மையில் ஊர் சென்று திரும்பிய மன்ற செயலாளர் சகோ. எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் அவர்கள். மன்ற செயல்பாடுகளையும், ஊரில் இருந்தபோது மன்றம் சார்பாக ஊரில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரத்தையும், இக்ரா ஆற்றி வரும் உன்னத சேவைகளையும் அவர்கள் சிரமம் மேற்க்கொண்டு செய்யும் தொய்வில்லா பணிகளையும் வெகுவாக எடுத்துரைத்து பாராட்டினார். இன்னும் அவர்கள் சிறப்புடன் செயலாற்ற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.
கல்வி மற்றும் மருத்துவ உதவிகள்:
மன்றத்திற்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த விண்ணப்பங்களை முறைப்படுத்தி இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் மற்றும் பள்ளி ஜமாஅத் பரிந்துறையின்படி வந்த கடிதங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு புற்று நோயால் அவதியுறும் மூவருக்கும், மார்பில் கட்டி அறுவைசிகிச்சை, கண் அறுவைசிகிச்சை, நீரடைப்பால் அவதியுறும் ஆறுமாத குழந்தைக்கு அறுவைசிகிச்சை, மூட்டு அறுவைசிகிச்சை மற்றும் மூளைக்கட்டி அறுவைசிகிச்சையால் பலனின்றி அண்மையில் வபாத்தான அன்னாரின் மருத்துவக்கடன் வகைக்கு என மொத்தம் எட்டுப்பேருக்கு மருத்துவ உதவி மற்றும் பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவருக்கு உயர் கல்விக்கான உதவி வழங்கிட ஒரு மனதாக முடிவுசெய்யப்படடது.
கலந்துரையாடல்:
மன்ற செயற்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடலில் நல்ல பல கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விவாதத்தின் போது இங்கே எடுத்துரைத்தனர். அத்துடன் மதீனா, மற்றும் யான்பு காயல்வாழ் சகோதரர்களையும், உறுப்பினர்களையும் நேரில் சென்று சந்தித்து நம் மன்ற செயல்பாடுகளை எடுத்துரைத்து சந்தாக்களை மேம்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் இங்கே பதிவு செய்தனர். இந்த அமர்விற்கு இம்மன்றத்தின் மதீனா உறுப்பினர் சகோ. எஸ்.ஏ. அஷ்ரப் மூஸா கலந்து கொண்டார்.
தீர்மானங்கள்:
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. புதிதாக உதயமாகி நம் காயல்மாநகருக்கு சேவையாற்ற காத்திருக்கும் அபுதாபி காயல் நலமன்றத்திற்கு பிரார்த்தனையுடன் கூடிய நல்வாழ்த்துக்களை இம்மன்றம் தெரிவிக்கின்றது.
2. காயல்பட்டினம் - சென்னை வழிக்காட்டு மையத்தின் பணி சிறக்க பிரார்த்தனையுடன் கூடிய நல்வாழ்த்துக்களை இம்மன்றம் பதிவு செய்கின்றது.
3. இக்ராவின் ஒன்றிணைந்த கல்வி பரிசுத்திட்டத்திற்கு எமது நலமன்றமும் இணைந்து செயலாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.
4. அடுத்த செயற்குழுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெள்ளி மாலை சகோதரர் எம்.என்.முஹம்மத் ஷமீம் (பாட்ச்சி) அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இறுதியாக சகோ. சொளுக்கு.எம்.ஐ. செய்யத் முஹம்மத் சாஹிப் நன்றியுரையை நவில, பின் சகோ.கத்தீபு. எம்.என். உமர் அப்துல் காதரின் பிரார்த்தனையுடன் அன்றைய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்து லில்லாஹ்.
சகோ. சட்னி எஸ்.ஏ. செய்யது மீரான், சகோ. சட்னி எஸ்.ஏ. முஹம்மது உமர் ஒலி இவர்களின் அனுசரணையில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல்,
எஸ்.ஹெச்.அப்துல் காதர்,
நிழற்படங்கள்,
முஹம்மது ஸாலிஹ், மக்கா.
|