ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரில், அபூதபீ காயல் நல மன்றம் என்ற பெயரில் புதியதோர் அமைப்பு, இம்மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துடன் முறைப்படி துவங்கியது. மன்றத்தின் நிர்வாகிகள், துறை பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பொதுக்குழுக் கூட்டம்:
அமீரகத் தலைநகர் அபூதாபியில் காயல் நல மன்றத்தின் துவக்க விழா மற்றும் முதல் பொதுக்குழு கூட்டம் ஹம்தான் சாலையில் அமந்துள்ள ருசி பான்க்குவெட் ஹாலில் திரளான காயலர்கள் பங்கேற்க சிறப்புடன் நடைபெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ இப்பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு:
அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, அய்மான் கல்லூரி தலைவர் கனிமொழிக் கவிஞர் ஜே.ஷம்சுத்தீன் ஹாஜியார், அபூதபீ அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத், "உணர்வாய் உன்னை" நிகழ்ச்சி நடத்தி வரும் பொதக்குடி ஜலால், அல் தாவியா ரெக்ரூட்மெண்ட் நூர் இப்ராஹிம் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் நினைவுக் கேடயம் பரிசளித்து வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்முறை:
அபூதபீ காயல் நல மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். துவக்கமாக இறைமறை திருக்குர்ஆனின் வேத வசனங்களை மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி துவக்கினார். மன்றத்தின் மூத்த உறுப்பினர் சுப்ஹான் பீர் முஹம்மத் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்புரை:
அதனைத் தொடர்ந்து பொதக்குடி ஜலால் ஒற்றுமையின் அவசியம் என்ற தலைப்பில் பேசினார். பின்னர், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுசைன் மக்கீ மஹ்ழரீ உரையாற்றினார். அபூதபீ காயல் நல மன்றம் இறையருளால் வெற்றிகரமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் தலைமைக்கும், நிர்வாகத்திற்கும் கட்டுப்பட்டு, முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான அல் தாவியா மேலாளர் நூர் இபுராஹிம், அமீரகத்தில் வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து உரையாற்றிய ஏ.ஆர். ரிஃபாயி மன்ற உறுப்பினர்கள் சந்தாக்களை தாராளமாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வாழ்த்துரை:
அடுத்து, வாழ்த்துரைகள் துவங்கின. துவக்கமாக வாழ்த்திப் பேசிய ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, அபூதபீ காயல் நல மன்றத்திற்கு அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் துபை நிர்வாகம் முழு அளவில் நல்கும் என்று உறுதியளித்தார்.
அடுத்து, அய்மான் கல்லூரி தலைவர் கனிமொழிக் கவிஞர் ஜே.ஷம்சுதீன் ஹாஜியார் பேசுகையில், பொதுச்சேவை என்பது காயலர்கள் வாழ்வோடு ஊறிப் போன ஒன்று என்றும், அபூதபீவாழ் இந்திய முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் அய்மான் சங்கம், 1980இல்வ காயல்பட்டினம் மர்ஹூம் ஜெய்னுல் ஆபிதீன் காக்கா அவர்கள் வீட்டில்தான் துவக்கப்பட்டது என்பதனையும் நன்றியுடன் நினைவுகூர்வதாகத் தெரிவித்தார்.
அடுத்து, அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத், ஹாஜி துணி உமர் ஸாஹிப், சாளை ஷேக் ஸலீம் ஆகிய துபை மன்ற நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
தலைமையுரை:
இறுதியாக அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையுரையாற்றினார்.
ஓர் அமைப்பை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல என்றும், ஒற்றுமையோடு செயல்பட்டு, வருங்காலத்தில் ஊருக்கும், சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் அபூதபீ காயல் நல மன்றம் செயல்படும் என்றும் உறுதியளித்தார். மக்கள் சேவை ஒன்றே அபூதாபி மன்றத்தின் குறிக்கோளாக இருக்கும் என்பதனை அவர் தனதுரையில் கோடிட்டுக் காட்டினார்.
புதிய நிர்வாகிகள் - பொறுப்பாளர்கள் தேர்வு:
அதனைத் தொடர்ந்து, மன்ற நிர்வாகிகள் மற்றும் துறைவாரியான பொறுப்பாளர்கள் பின்வருமாறு முறைப்படி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
கவுரவத் தலைவர்:
ஐ.இம்தியாஸ் அஹ்மத் (மெல்கோ)
செயல் தலைவர்:
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ
துணைத்தலைவர்:
எம்.எம்.மக்பூல் அஹ்மத்
பொதுச்செயலாளர்:
வி.எஸ்.டி.ஷேக்னா
துணைப் பொதுச்செயலாளர்:
ஆர்க்கிடெக்ட் எம்.ஜே.ஹபீபுர்ரஹ்மான்
பொருளாளர்:
எம்.ஓ,அன்ஸாரீ
துணைப் பொருளாளர்:
இப்றாஹீம் இர்ஷாத்
மக்கள் தொடர்பாளர்:
ஏ.ஆர்.ரிஃபாயி
செய்தித் தொடர்பாளர்:
எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (FNC)
முஸஃப்பா மண்டல பொறுப்பாளர்கள்:
இஸ்மாஈல் (அமீரீ ஃப்ளைட்) மற்றும் நூருல் ஹக்
சந்தா சேகரிப்பாளர்:
எம்.ஏ.எஸ்.லெப்பைத்தம்பி
இவ்வாறு நிர்வாகிகள் மற்றும் துறைவாரியான பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிறைவாக, இந்நிகழ்வில் கலந்துகொண்டோர், நிகழ்வுக்கு ஏற்பாடுகளைச் செய்தோர் அனைவருக்கும் ஆர்க்கிடெக்ட் எம்.ஜே.ஹபீபுர்ரஹ்மான் நன்றி கூற, ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
பங்கேற்றோர்:
இந்த நிகழ்ச்சியில் அபூதபீ, அல்அய்ன், ருவைஸ் மற்றும் துபை காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மகளிரும் தமது தனிப்பகுதியிலிருந்தவாறு மன்றத்தின் நிறைவான செயல்பாடுகளுக்கு நல்லாலோசனைகளைத் தெரிவித்தனர். இரவு உணவு விருந்துபசரிப்புக்குப் பின்னர் அனைவரும் தமதிருப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.C.ஹமீத்,
படங்கள்:
சுப்ஹான் பீர் முஹம்மத்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம். |