இம்மாதம் 22ஆம் தேதியன்று, கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்ற பொதுக்குழு கூடுகிறது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் பெங்களூரு காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணி முதல் 05.00 மணி வரை, பெங்களூரு லால்பாக் பூங்காவில் (கடந்த கூட்டம் நடைபெற்ற இடத்தில்) நடைபெறவுள்ளது.
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று, கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வருமாறும், பெங்களூரிலுள்ள அனைத்து காயலர்களுக்கும் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |