காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில் செயல்பட்டு வரும் ஹயாஷி கராத்தே பள்ளி மாணவர்களுக்கு தரப்பட்டை (Belt Grading) வழங்கும் நிகழ்ச்சி, 17.01.2012 செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை எதிரிலமைந்துள்ள் அதன் கிளைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், தைக்கா சாமு ஷிஹாபுத்தீன், பீர் சலீம் கான், மாஸ்டர் விகாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜே.ஏ.லரீஃப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஆர்.எஸ்.கோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அடுத்து, ஹயாஷி கராத்தே பள்ளிகளின் அகில இந்திய பொதுச்செயலாளர் வி.எம்.சி.மனோகரன், கராத்தே எனும் தற்காப்புக் கலை குறித்து அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத்த தலைவர் ஐ.ஆபிதா, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் வாழ்த்துரை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கராத்தே எனும் தற்காப்புக் கலையின் அவசியம், உடல் நலனில் அதன் பங்களிப்பு ஆகியவை குறித்து விளக்கிப் பேசிய அவர்கள், சிறுவர்களிடம் ஓடியாடும் விளையாட்டுகள் மிகவும் அரிதாகிப் போன இக்காலகட்டத்தில், இதுபோன்ற பயிற்சிப் பள்ளிகளிலாவது பிள்ளைகளை சேர்த்து பயனடையச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறினர்.
பின்னர், கராத்தே கலை - அதனால் விளையும் நன்மைகள் குறித்தும், தரப்பட்டைகளைப் பெறும் மாணவ-மாணவியரை வாழ்த்தியும், ஜப்பான் நாட்டின் 7ஆம் நிலை கருப்புப் பட்டை தர கராத்தே வீரரான - மலேஷிய நாட்டைச் சார்ந்த கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா சிறப்புரையாற்றினார்.
பின்னர், கராத்தே செய்முறைத் தேர்வு நடைபெற்றது. கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா, 26 மாணவர்களின் கராத்தே செய்முறைகளை ஆய்வு செய்து தரப்பட்டைகளை வழங்கினார்.
அவர்களுக்கான சான்றிதழ்களை, காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அவரது கணவர் ஷேக் முஹம்மத் மன்றும் முன்னிலை வகித்தோர் வழங்கினர்.
நிறைவாக, காயல்பட்டினம் ஹயாஷி கராத்தே பள்ளியின் மாஸ்டர் இர்ஃபான் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும், மாணவ-மாணவியரின் பெற்றோரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|