காயல்பட்டினம் புறவழிச்சாலையிலும், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு திருப்பத்திலும் தன்னிச்சையாக அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டுக் கற்கள் நேற்று (19.01.2012) அன்று இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
சமூக விரோதிகள் சிலரால் சட்ட விரோதமாக நிறுவப்பட்டிருந்த அவற்றை உடனடியாக அகற்றி, பெரும்போராட்டத்தைத் தவிர்த்திடுமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் தலைமையில் அக்கட்சியினரும், நகர தமுமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையரை 18.01.2012 அன்று நகராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து முறையிட்டனர்.
அதனையடுத்து, நேற்று இரவு ஆறுமுகநேரி காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து, சட்ட விரோதமாக நிறுவப்பட்டிருந்த வழிகாட்டு கற்கள் அனைத்தையும் அகற்றி அப்புறப்படுத்தியதாகத் தெரிகிறது.
தற்போது அவ்விடத்தில், “உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு மயான சாலை” என்று அமைக்கப்பட்டிருந்த கல், அதன் பின்னர் “காட்டுப்பக்கீர் ஒலியுல்லாஹ் தர்கா செல்லும் வழி” என்று அமைக்கப்பட்டிருந்த கல் என அனைத்தும் அகற்றப்பட்டு, அவ்விடம் வெற்றிடமாக காட்சியளிக்கிறது.
கள உதவி:
தமீமுல் அன்ஸாரீ.
சித்தன் தெரு, காயல்பட்டினம். |