காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் டிசம்பர் 2000 முதல் நகர செய்திகள் வழங்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை இணையதளம் வழங்குவதும், அதனை காணும் வாசகர்கள் - அது குறித்த தங்கள் எண்ணங்களை- பிறருடன் பரிமாறிக்கொள்ள வழி ஏதும் இல்லாமலும் இருந்த நிலை - பல காலமாக - இருந்து வந்தது. இணையதள தொழில்நுட்பம் மூலம் - சமுதாயத்தில் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் விதமாக - செப்டம்பர் 2010 முதல் - செய்திகள் குறித்த வாசகர் கருத்துக்களும் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - வெளியிடப்பட்டுவருகின்றன.
சமுதாய அக்கறையும், எழுத்து ஆர்வமும் உள்ள காயலர் பலரின் கருத்துக்களை வெளியிடும் நோக்கில், ஆகஸ்ட் 2011 இல் - சிறப்பு கட்டுரைகள் - பகுதி இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பக்கம் மூலம் - அவ்வப்போது - சமூக ஆர்வலர்களின் - நகர பிரச்சனைகள் மற்றும் இதர முக்கிய விஷயங்கள் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
பல வித கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டும் என்ற முயற்சியின் தொடர்ச்சியாக, தற்போது - காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - எழுத்து மேடை - பகுதி செயல்பட துவங்கியுள்ளது. இப்பக்கம் - வாரம் ஒரு முறையோ, இருவாரத்திற்கு ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ - நகரின் சமூக ஆர்வலர்கள் / எழுத்தாளர்கள், சமுதாயத்தின் முன் உள்ள பல பிரச்சனைகளில் தங்கள் கருத்துக்களை, வாசகர்களுடன் பரிமாறிக்கொள்ள ஒரு மேடையாக அமையும். இந்த ஆசிரியர் வட்டம் வருங்காலங்களில் - விரிவாக்கப்படும்.
சமூக பார்வையாளர் N.S.E.மஹ்மூது எழுதிய அடியேன் எதிர்பார்க்கும் நகர்மன்றம்,
கவிஞர் / சமூக பார்வையாளர் கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர் எழுதிய நியாயத் தராசு,
முன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர் முஸ்தாக் அஹ்மத் எழுதிய தொலைக்கப்பட்ட சுவனத்து முகவரி,
எழுத்தாளர் / சமூக பார்வையாளர் சாளை பஷீர் ஆரிஃப் எழுதிய வாசிப்பும், வாழ்வும்,
எழுத்தாளர் A.L.S. இப்னு அப்பாஸ் எழுதிய நடப்பதினால் ஏற்படும் நன்மைகள்
ஆகிய கட்டுரைகள் தற்போது எழுத்து மேடை பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அக்கட்டுரைகளில் சில இணையதளத்திற்கு பல மாதங்களுக்கு முன்னர் சமர்பிக்கப்பட்டவை. சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக - அவைகள், அவ்வேளையில் வெளியிடப்படவில்லை என்பதனையும், அதற்காக எங்கள் வருத்தத்தையும் தெரிவித்துகொள்கிறோம்.
|