பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும். நடப்புக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில பாடத் திட்ட மாணவர்கள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பாடத் திட்ட மாணவர்கள் ஆகிய அனைவரும் பொதுப்பாடத் திட்டத்தை பயின்று வருகின்றனர். இவர்களுக்கும், இந்த ஆண்டு நேரடியாகத் தனித்தேர்வு எழுதுவோருக்கும் இந்த அட்டவணையின்படி பொதுத் தேர்வு நடைபெறும்.
தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாளைப் படிப்பதற்கும், 10.10 முதல் 10.15 வரை விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் நேரம் வழங்கப்பட்டிருக்கிறது. 10.15 முதல் 12.45 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதலாம்.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவியல் பாடத்தில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படும். செய்முறைத் தேர்வில் தேர்ச்சியடைய குறைந்தபட்சம் 15 மதிப்பெண்ணும், எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
04-4-2012 (புதன்) மொழி தாள் (LANGUAGE) - 1
09-4-2012 (திங்கள்) மொழி தாள் (LANGUAGE) - 2
11-4-2012 (புதன்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 1
12-4-2012 (வியாழன்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 2
16-4-2012 (திங்கள்) கணிதம் (MATHEMATICS)
19-4-2012 (வியாழன்) அறிவியல் (SCIENCE)
23-4-2012 (திங்கள்) சமூக அறிவியல் (SOCIAL SCIENCE)
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் - மார்ச் 8 அன்று துவங்குகின்றன.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - கல்வி (EDUCATION) பிரிவின் கீழ் - பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வுகள் கால அட்டவணைக்கான நிரந்தர பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு கால அட்டவணையினை காண இங்கு அழுத்தவும்
பன்னிரண்டாம் வகுப்பு கால அட்டவணையினை காண இங்கு அழுத்தவும்
[செய்தி திருத்தப்பட்டது @ 10:30 am/22.01.2012] |