நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளராக - கடலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வீ. அமுதவல்லி IAS நியமிக்கப்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிப்பணியில் இணைந்த இவருக்கு வயது 45. இது குறித்த அறிவிப்பு - வெள்ளியன்று (ஜனவரி 20) வெளியானது.
இத்துறையின் செயலாளராக டிசம்பர் 7 அன்று திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் IAS - டாக்டர் எஸ்.கருத்தைய பாண்டியன் IAS க்கு பதிலாக நியமிக்கப்பட்டார். 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிப்பணியில் இணைந்த இவருக்கு வயது 58. இவர் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராகவும் செயல்புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. Re:அமுதவல்லி IAS - நகராட்சி ... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்)[23 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16120
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் IAS அவர்களை நமது நகரமன்ற தலைவி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் நமதூரின் முக்கிய தேவையான இரண்டாம் குடிநீர் திட்டத்தை நடைமுறை படுத்தும் சம்மந்தமாக சந்தித்து பேசுவது நல்லது...
இவரும் ஒரு பெண் நமது நகரமன்ற தலைவியும் ஒரு பெண் ஆகையால் இருவரும் கலந்து பேசினால் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்... என்பது என் கருத்து..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross