இந்திய குடியரசு தினத்தையொட்டி, மாநில அளவில் நடத்தப்படும் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி, துவக்கப் போட்டியில் சிறப்புற விளையாடி வெற்றி பெற்று, காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஈரோடு கந்தா மெட்ரிக் மேனிலைப்பள்ளி அணியினரை எதிர்த்து எல்.கே.மேனிலைப்பள்ளி துவக்க ஆட்டத்தில் மோதியது.
மிகவும் பரபரப்புடன் துவங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் சம பலத்துடன் மோதினர். ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் பின் கள வீரர் முஜம்மில் அருமையாக அடித்த கோல் மூலம் அந்த அணி முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் பிற்பாதியில், அதே பள்ளியின் வாசிஃப் என்ற வீரர் அடித்த கோல் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி வெற்றிபெற்று, நாளை காலை நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டியில் சேலம் அணியை எதிர்த்து ஆடவுள்ளது.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும், சிறந்த கால்பந்தாட்ட வீரருமான ஜமால் மாணவர்களுக்கு பயிற்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |