காயல்பட்டினத்திலுள்ள மருந்தகங்கள் குளிரூட்டப்பட்ட நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதுவரை முற்றிலும் திறந்த நிலையில் இருந்த இந்நிறுவனங்களின் முகப்பில் தற்போது கண்ணாடி அடைப்பு நிறுவப்பட்டும், உள்ளே ஏர் கன்டிஷன் கருவிகள் பொருத்தி குளிரூட்டப்பட்டும் வருகிறது.
இதுகுறித்து, அந்நிறுவனங்களைச் சார்ந்தோரிடம் வினவுகையில், மருந்தகங்களிலுள்ள மருந்துப் பொருட்கள் கெடாதிருக்கும் பொருட்டு குளிரூட்டப்பட்டவையாக அவை இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக மருந்தகங்களைத் திறப்போர் இந்த விதிமுறைகளின்படியே கடைகளை அமைக்க வேண்டுமென்றும், ஏற்கனவே கடை வைத்திருப்போர், தமது வணிக உரிமத்தைப் புதுப்பிக்கச் செல்லும்போது - அந்நிறுவனங்கள் குளிரூட்டம் செய்யப்படவில்லையெனில் உரிமம் புதுப்பிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
கடைசி படத்திலுள்ள மருந்தகம் அண்மையில் திறக்கப்பட்டது. திறக்கும்போதே குளிரூட்டப்பட்ட வசதியுடன் அது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. |