இணையதளங்கள் மூலமும் (eticket), tatkal முறையிலும் டிக்கெட் வாங்கி ரயில் பயணம் மேற்கொள்வோர் - அடையாள அட்டையினை, தாங்கள் பயணம் மேற்கொள்ளும் போது, டிக்கெட் பரிசோதனையாளரிடம் காண்பிக்கவேண்டும். முன்பதிவு நிலையங்களில் நேரடியாக வாங்கப்படும் டிக்கெட்களுக்கு இந்த அவசியம் கிடையாது. இந்த வழிமுறை - பல மாதங்களாக அமலில் உள்ளது.
AC வகுப்பு டிக்கெட்கள் (First AC, AC 2-tier, AC 3-tier, AC Chair Car, Executive classes) - இடைத்தரகர்களால் வாங்கப்பட்டு, கருப்பு சந்தையில் விற்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து - தற்போது, இந்திய ரயில்வே புதிய விதிமுறையினை அறிவித்துள்ளது. அதன்படி - மேலே குறிப்பிடப்பட்டுள்ள வகுப்புகளில், நேரடியாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்கள் கொண்டு பயணம் மேற்கொள்வோரும், i-ticket (இணையதளம் மூலம் பணம்கட்டி, கூரியர் மூலம் பெறப்படும் டிக்கெட்) கொண்டு பயணம் மேற்கொள்வோரும் - கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை, பயணத்தின்போது கொண்டு செல்லவேண்டும். இந்த விதிமுறை பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் விபரம் வருமாறு:-
1) வாக்காளர் அட்டை
2) பாஸ்போர்ட்
3) வருமானவரி அட்டை
4) ஓட்டுனர் உரிமம்
5) மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்படும், புகைப்பட அட்டை
6) புகைப்படம் கொண்ட மாணவர்கள் அடையாள அட்டை
7) தேசிய வங்கிகளால் விநியோகிக்கப்பட்ட - புகைப்படம் கொண்ட - பாஸ்புக்
8) புகைப்படம் கொண்ட கிரெடிட் கார்டு
9) ஆதார் அட்டை (Aadhar)
[செய்தி திருத்தப்பட்டது @ 3:45/25.01.2012]
|