இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி எதிரில் இயங்கி வரும் ரஹ்மானிய்யா மழலையர் பள்ளியில் இன்று காலை 09.30 மணிக்கு குடியரசு தின விழா, அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஏ.ஆயிஷா தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், அப்பள்ளியின் அபிமானியும், ஓவியக்கலை ஆசிரியருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றினார்.
இவ்விழாவில் பள்ளியின் மழலை மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. |