சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், கல்வி, மருத்துவம், சிறுதொழில் ஆகியவற்றுக்காக காயல்பட்டினத்தைச் சார்ந்த ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவியாக தொன்னூற்று இரண்டாயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
உலகாளும் வல்ல நாயன் அல்லாஹ்வின் அருட்பெரும் துணைக்கொண்டு, எமது காயல் நற்பணி மன்றம் - ரியாத் (RKWA) அமைப்பின் 27ஆவது செயற்குழுக் கூட்டம் கடந்த 20.01.2012 வெள்ளிக்கிழமை புனித ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொறியாளர் S.M.A.முஹியத்தீன் சதக்கத்துல்லாஹ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் துணைத்தலைவர் M.N.மின்ஹாஜ் முஹிய்யத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஹாஃபிழ் P.S.J.ஜைனுல் ஆபிதீன் அவர்களால் இறைமறை துணைக்கொண்டு துவங்கியது.
உறுப்பினர்களின் காயல் மாநகர் நலன் குறித்து பல்வேறு விசயங்கள் பரிமாறப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 1 - பொதுக்குழு கூட்டம்:
எம் மன்றத்தின் குளிர் கால பொதுக்குழு கூட்டம் எதிர் வரும் 10 .02.2012 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, ஹால்ப் மூன் ஹோட்டல் பார்ட்டி ஹால் பத்ஹாவில் நடைபெற இருக்கிறது.
மன்றத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட காயல் மக்கள், அபிமானிகள் அனைவர்களும் அவசியம் கலந்து கொள்ள இச்செயற்குழு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறது .
தீர்மானம் 2 - புதிய நகர் நல மன்றத்திற்கு வாழ்த்து:
புதிதாக துவங்கி உள்ள அபூதாபி காயல் நற்பணி மன்றம் ஆல் போல் தழைத்து நமதூர் மக்களுக்கு மென்மேலும் சீரான பணியாற்றிட மனமார வாழ்த்துகிறோம்
தீர்மானம் 3 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கீழ் கண்டவாறு நிதி உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வுயர் துயர்துடைக்கும் சீரியபணியில் பங்குகொண்டு தாராளமாக உதவிய அன்பு உள்ளங்களுக்கு இம்மன்றம் மனப்பூர்வமான துவாவையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது.
மருத்துவம்:
(அ) திடீர் என மயங்கி பக்க வாதம் ஏற்பட்டு அவசர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 வயது சிறுவனின் மருத்துவ உதவிக்கு ரூபாய் 20 ,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(ஆ) கர்ப்பப்பை பிரச்சினை தீவிர சிகிச்சைக்கு சகோதரி ஒருவரிடம் இருந்து வந்த கடிதம் பரிசீலிக்கப்பட்டு ரூபாய் 10 ,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(இ) ஈரல்,கிட்னி பிரச்சினையில் தவிக்கும் 7 மாத பச்சிளம் குழந்தையின் தீவிர சிகிச்சைக்கு ரூபாய் 20 ,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(ஈ) தொண்டை கேன்சர் நோயினால் அவதியுறும் சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 10 ,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(உ) எலும்பு முறிவு ஆபரேசன் வகைக்கு மாணவன் ஒருவனின் மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய் 5,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
சிறு தொழில்:
(அ) துணி மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் வகைக்கு உதவி கேட்டு வந்த சகோதரி ஒருவரின் கடிதம் பரிசீலிக்கப்பட்டு ரூபாய் 15 ,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
கல்வி உதவி:
(அ) வறுமையில் வாடும் சகோதரி ஒருவரின் பிள்ளைகள் படிப்பு செலவிற்கு மாதம் ஒன்றுக்கு 1,000/- ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கு ரூபாய் 12 ,000 /- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - புதிய நிர்வாகக்குழு:
நடப்பு 2012-2013ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகள் எதிர்வரும் பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்ன. நன்றிவுரைக்குபின் இறுதியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கள் கூற இறையருளால் இனிதாய் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். கூட்டத்தைத் தொடர்ந்து, அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.முஹம்மத் லெப்பை,
துணைச்செயலாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா. |