Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:33:31 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7922
#KOTW7922
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 27, 2012
பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை அமைய மாவட்ட ஆட்சியர் உத்தரவு! முழு விபரம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5483 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தின் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பெரிய நெசவு தெரு வழியாக இப்பாதை அமையக்கூடாது என அத்தெருவை சார்ந்த அஹமத் மொஹிதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கில் - ஜூலை 27, 2010 அன்று ஆணை பிறப்பித்த உயர்நீதிமன்றம், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, ஆணை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தது.

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று நகரில் நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS - காயல்பட்டினத்தில் ஒரு வழி பாதை அமைவது குறித்து தற்போது ஆணை பிறப்பித்துள்ளார். அதில் -

<> பெரிய நெசவு தெரு - எல்.கே.லெப்பை தம்பி சாலை வழியாக தற்போது நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் போக்குவரத்து இயக்கப்படவேண்டும் என்றும்

<> பெரிய நெசவு தெரு நுழைவில் மற்றும் இதர இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகளையும் உடனடியாக நகராட்சி ஆணையர் அப்புறப்படுத்த வேண்டும் என்றும்

<> மாற்று பாதையாக பொதுமக்களில் ஒரு பகுதியினரால் பரிந்துரைக்கப்பட்ட நீரோடை பாதையில் வருங்காலங்களில் சாலை அமைத்து - பஜார் மற்றும் இதர சாலைகளின் போக்குவரத்தினை குறைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும் என்றும்

உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள ஆணையின் முழு விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சார்ந்த அஹ்மத் மொஹிதீன் என்பவர் - சென்னை உயர்நீதி மன்றத்தின், மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார் (WP [MD] No.9446 of 2010). அதில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் உள்ள பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழி பாதை அமைய தடை விதிக்கும்படி கோரியிருந்தார். அந்த வழக்கில் (WP [MD] No.9446 of 2010) - மாவட்ட ஆட்சியர் பெரிய நெசவு தெரு பாதையை ஆய்வு செய்து, காயல்பட்டினத்தில் ஒரு வழி பாதை அமைவது குறித்து உரித்த ஆணையை பிறப்பிக்க வேண்டும் என - ஜூலை 27, 2010 அன்று (உயர் நீதி மன்றம்) உத்தரவிட்டது.

இது குறித்து மனுதாரர், திருச்செந்தூர் DSP, ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர், திருச்செந்தூர் தாசில்தார், காயல்பட்டின நகர்மன்ற ஆணையர், தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஆகியோர் டிசம்பர் 21, 2011 அன்று விசாரிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.

பரிந்துரைக்கப்பட்ட ஒரு வழிப்பாதையும், மாற்றாக பொதுமக்களின் ஒரு பகுதியினரால் பரிந்துரைக்கப்பட்ட பாதையினையும் - மாவட்ட ஆட்சியர் - டிசம்பர் 30, 2011 அன்று நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது அவருடன் - மண்டல போக்குவரத்து அலுவலர் (RTO), திருச்செந்தூர் RDO, திருச்செந்தூர் DSP, திருச்செந்தூர் தாசில்தார், காயல்பட்டின நகர்மன்ற ஆணையர், போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர், தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

உயர் நீதி மன்றம் உத்தரவிட்டதுபோல் பெரிய நெசவு தெருவினை ஆய்வு செய்த போது - பெரிய நெசவு தெருவின் அகலம் 35 அடி முதல் 40 அடி வரை இருந்தது (சில இடங்களில் சிறிது வேறுப்பட்டது). ஆய்வு செய்யப்படும் வேளையில் அத்தெரு - ஒரு வழிப்பாதை அன்றி, இரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தெருவில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் - இத்தெருவினை தொடர்ந்து இருக்கும் (எல்.கே.லெப்பை தம்பி என்ற) சாலையில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. சில குறுக்கு தெருக்கள் - இந்த இரு தெருக்களுடன் இணைகின்றது. இதற்கு முன்னரே இப்பாதை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அப்பாதையில் பேரூந்துகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் சென்றுள்ளன.

பொதுமக்களில் சிலரால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப்பாதையும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த மாற்றுப்பாதையில் குறைந்தது நான்கு இடைஞ்சல்கள் காணமுடிந்தது. உதாரணமாக - குறுகிய சாலை மற்றும் திடீர் வளைவுகள். மேலும் இப்பாதையில் உள்ள நீரோடையின் மேல் பாதை அமைக்கவேண்டும். அப்பாதை மேலே குறிப்படப்பட்டுள்ள இடைஞ்சல்கள் கொண்ட குறுகிய சாலைகளில் சென்றடைகிறது. தற்போது - இப்பாதை பயன்படுத்த சாத்தியமாக இருப்பதாக தெரியவில்லை.

பொது மக்களில் பெருவாரியானோர் - முன்னர் இருந்தது போல் - பெரிய நெசவு தெருவழியாக - ஒரு வழிப்பாதை அமைய வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களில் ஒரு பகுதியினர் - மேலே குறிப்பிட்டது போல் - மாற்றுப்பாதையை பரிந்துரைத்தனர். தற்போது உள்ள சாலைகளில் ஏதாவது சாலை வழியாக ஒரு வழிப்பாதை அமைவதை யாரும் எதிர்க்கவில்லை. ஏன் எனில் எல்லோரும் பஜார் சாலை (மாநில நெடுஞ்சாலை 176) குறுகியது என்றும், இனியும் தொடர்ந்து இச்சாலை இரு வழி போக்குவரத்தை தாங்காது என்றும், குறிப்பாக பேருந்துகள், கார்கள், லாரிகள் போன்ற நான்கு சக்கர வாகன போக்குவரத்தை தாங்காது என்றும் உணர்ந்திருந்தனர்.

மண்டல போக்குவரத்து அலுவலர் (RTO), தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக மண்டல மேலாளர், திருச்செந்தூர் DSP மற்றும் காயல்பட்டின நகர்மன்ற ஆணையர் ஆகியோர் கருத்துக்கள்படி - பரிந்துரைக்கப்பட்ட ஒரு வழிப்பாதை மிக அவசியம் என தெளிவாக தெரிகிறது. மேலும் காயல்பட்டின நகர்மன்ற ஆணையர் தெரிவித்தது படி பஜார் சாலையில் - நிரந்தர சாலையோர ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லை. கடை உரிமையாளர்களால் அமைக்கப்பட்டுள்ள வெயிலினை தடுக்கும் கூரைகளும், தற்காலிக கூரைகளும் தான் உள்ளன. அவைகளும் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே - களத்தில் நேரடியாக மேற்கொண்ட ஆய்வின் படியும், அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அல்லாத பலரிடம் இருந்தும் பெறப்பட்ட தகவல்கள்/கருத்துக்கள் அடிப்படையிலும் கீழ்க்காணும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

1) பெரிய நெசவு தெரு - எல்.கே.லெப்பை தம்பி சாலை வழியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு வழிப்பாதை - துவக்கமாக - பேருந்துகள், லாரிகள், கார்கள், ஜீப்கள், ஆட்டோக்கள் போன்ற நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மட்டும் - அமல்படுத்தப்படும். இப்பாதையில் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு - பின்னர் ஒரு தேதியில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு குழுவின் கூட்டத்தில் - இதர வாகனங்களுக்கும் இப்பாதையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கலாம்.

2) பெரிய நெசவு தெரு நுழைவில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக நகராட்சி ஆணையர் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இதர இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகளையும் நகராட்சி ஆணையர் அப்புறப்படுத்த வேண்டும்.

3) மாற்று பாதையாக பொதுமக்களில் ஒரு பகுதியினரால் பரிந்துரைக்கப்பட்ட நீரோடை பாதையில் வருங்காலங்களில் சாலை அமைத்து - பஜார் மற்றும் இதர சாலைகளின் போக்குவரத்தினை குறைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும்


இவ்வாறு அவ்வாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்லாஹு நன்மையே நாடியிருப்பான்
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [27 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16258

அல்ஹம்து லில்லாஹ், ஒரு வகையாக அந்த பிரச்சினைக்கு முற்று புள்ளி வைத்தது போல மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் ஒரு வழி பாதை விரைவில் நடைபெற்று விடும் என்று நாம் எதிர்பார்ப்போம்.

நெசவு தெரு மக்களே, நீங்களும் இதற்க்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அல்லாஹு நன்மையே நாடியிருப்பான். நீங்கள் கொடுத்த அந்த மாற்று பாதையையும் ஆய்வு செய்யவேண்டும் என்றும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் உங்களின் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துகொண்டு இப்போது அல்லாஹுவின் நாட்டம் இது தான் என்று இதற்க்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [27 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16266

ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு போகும் போது காஷ்மீர் இந்தியாவுக்கா,பாக்கிஸ்தானுக்கா? என்று சொல்லாமலும், போனான்.

விளைவு?

இப்பவும்,ஒரே குழப்பமாக உள்ளது!
இப்ப ஆசிஸ் குமாரும் குழப்புகிறார்!
முடிவு எப்படி வருமோ?

சந்தோசமாக இருக்குங்க!
மொத்ததில,தளாங்கு தக்க தரிக்கின தாமுங்க!
மக்களே புரிந்தா சரிங்க!
புரியாட்டி?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by Cnash (Makkah) [27 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16272

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த செய்தி.. மகிழ்ச்சியான செய்தி!! இதற்கான முயற்சி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by Vilack SMA (kayalpatnam) [27 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16273

நல்ல செய்தி . " ஒருவழி " யாக முடிவுக்கு வந்தது கதை .

VSMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [27 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16274

அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் மிக பெரியவன். இந்த முடிவு யாருக்கும் வெற்றியோ அல்லது ஒரு தரப்பினருக்கு தோல்வியோ அல்ல...நெசவு தெரு ஜமாத்தார்கள், தயவு செய்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றோ , அல்லது தோல்வி என்றோ என்ன வேண்டாம்..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இதற்கான முயற்சி செய்தோம்.. அல்லாஹ் இதில் தான் நன்மை நாடி இருப்பான் போலும்...எனவே அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்று ஊரின் முன்னேற்றத்திற்கும், நலத்திற்கும் துணை நிற்போம்..

நெசவு தெரு மக்கள் இது வரை அனுபவித்து வந்த, சில வசதிகள் போக வாய்ப்பு இருந்தாலும், அதை நிவர்த்தி செய்ய நகராட்சி ஏற்கனவே கூறியபடி, சில பல வசதிகளை செய்து தர வேண்டும்.. அந்த வசதிகளை போக்குவரத்து உள்ள மற்ற தெருக்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்..

இந்த விசயத்தில், தாயும் பள்ளி ஜமாஅத் மற்றும் நெசவு தெரு ஜமாத்துக்குள் சில கருது வேறு பாடிகள் ஏற்பட்டாலும், அதை ஒரு சகோதர உத்தமாக நினைத்து, மறந்து, யார் வென்றாலும் அது ஊர் நன்மைக்கே என்ற ரீதியில் அடி எடுத்துமுன் செல்வோம்..

நேசவுய் தெரு ஜமாஅத் கொடுத்த மாற்று யோசனையும் , பரிசீலிக்க மாவட்ட ஆட்சியர் உத்திரவு இட்டபடியால், நாள் போக்கில் அந்த வலியும் வர வாய்ப்பு உள்ளது..அதற்க்கு அனைவரும் முயற்சிப்போம்.

தயவு செய்து யாரும், , பிறர் மனம் நோகும்படியான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்றும், அப்படி கருத்து வந்தால், அட்மின் அதை தவிர்க்கும் படி கேட்டுகொள்கிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஒரு வழிப்பாதை அமைய மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [28 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16285

அல்ஹம்துலில்லாஹ்....மகிழ்ச்சியான செய்தி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by velli muhiadeen (chennai) [28 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16287

வரவேற்க தக்க செய்தி. காயல் மக்களின் நீண்ட நாள் தேட்டம் நிறைவேற போகிறது என்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by mohamed abdul kader (dubai) [28 January 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16292

அஸ்ஸலாமு அழைக்கும்

வ்ரவேர்கதக்க ஒரு நல்ல செய்தி ஊர் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற இறைவன் இன்றுதான் நாடிஉள்ளான் போலும். அல்ஹம்துலில்லாஹ்

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by hasan (khobar) [28 January 2012]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16296

அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [28 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16298

அனைவரும் எதிர்பார்த்த, வரவேற்க தக்க நல்ல முடிவை மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ளார். அவருக்கு கோடானு கோடி வாழ்த்துக்கள்.

இந்த முடிவே நம் அனைவருக்கும் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு பகுதி வாழ் காயலர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.

நெசவு தெரு வாழ் அருமை சகோதரர்கள் அன்போடு இதனை ஏற்று நம்மோடு ஒத்துழைப்பதுடன், இனி நிர்மாணிக்கும் அவர்களது புதிய இல்லங்களுக்கு நமதூர் அமைப்பில் தென்பகுதி முடுக்கு, கிழபகுதி முடுக்கு என காயலுக்கே சொந்தமான முடுக்கு அமைப்பையும் இல்லாத இடங்களில் பின்பற்றினால் கூடுதல் பாதுகாப்பாகவும் அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [28 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16299

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்விற்கே.

நடப்பவைகள் அனைத்தும் நன்மையாக இருக்கட்டும், இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by ALS maama (Kayalpatnam) [28 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16313

அஸ்ஸலாமு அலைக்கும்,

4. நமது சுற்றுபுற ஊர்களில் நமது ஊர் மட்டுமே அதிகமான பண போக்குவரத்து உள்ள ஊர் - வியாபாரத்திலும், வசதியிலும். நிறைய பேர் வெளியிடங்களில் வாழும் ஊர் என்பதால் பெண்களின் நலனை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) | Comment Reference Number: 15749

மேற்கண்ட 4 வது குறிப்பை எழுதிய தோழர் HAMEED SIRAJUDEEN (Pondicherry) அவர்களின் சிந்தனைக்கு எனது கருத்தை வைக்கிறேன்.

கூளக் கடை பஜார் வழியாக பஸ் போவதால் இந்த பயம் ஏற்ப்படும் என்று கூறிய உங்கள் எண்ணங்கள் சரிதானா? கூளக் கடை பஜார், உங்கள் தெரு போல ஊருக்குள் நல்ல பாதுகாப்பான இடம்தான், உங்களை போல் சிலர் வேறு பாதை வழியாக பேருந்து போக்குவரத்தை எங்கோ திருப்பி விடுவதால் பெரும்பாலும் முஸ்லீம்கள் அல்லாத மக்கள் வாழும் பகுதியாகவும் அதேசமயம் அங்கு நமது வேற்றுமத சகோதரர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளிகள் , மாலை வேலை செய்துவிட்டு இரவில் சீக்கிரமாக தூங்கப்போகும் வழக்கம் உடையவர்கள்.

நம்பகுதி தெருக்களில் இரவு 11 மணி ஆனாலும் ஆள் நடமாட்டம் இருக்கும். புதிய போக்குவரத்து அந்த பாதையில் அமைந்தால் அது உங்களின் நாலாவது கருத்துக்கு ஆபத்தாக அமையாதா ?

அடிக்கடி நம் நாட்டில் எங்கோ ஏற்ப்படும் கலவரங்களை காட்டி நமதூரில் பலமுறை வாகன போக்குவரத்து தடைபட்டு நமது ஊர் மக்கள் வெளிஊரில் இருந்து உள்ளூருக்கு வர முடியாத காரணத்தை நீங்கள் ஏன் எண்ணிப்பார்க்கவில்லை. தற்போது பஜார் வழியாக வந்து K.T.M தெருவில் திரும்பி திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நெரிசலில் மாட்டி அந்த பேருந்துகள் தவிப்பதை நீங்கள் அறியவில்லையா.

இதனால் நமதூருக்கு வரும் வெளிஊர் மற்றும் வெளி மாநில பேருந்துகள் பல இந்தநேரம் அடைக்கலாபுரம் வழியாக செல்வது தெரியாதா,

இன்ஷா அல்லாஹ் நாளை நமது மக்களுக்கு நல்லதை செய்ய நாம் ஒற்றுமையாக, சுமூகமாக ஒருவழிப்பாதைக்கு வழி கொடுக்கலாம் அல்லவா..... அந்தகாலத்து பெரியவர்கள் ஊருக்குள் அதாவது தற்போது பழைய தொலைபேசி தொடர்பகம் அருகில் வரயிருந்த காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தை வரவிடாமல் தடுத்ததால் நம் ஊர் அனைத்து மக்களோடு நீங்களும் நானும் தான் கஷ்ட்டத்தை அனுபவிக்கிறோம், இது மாதிரி ஒருவழிப்பாதை ஊரைவிட்டு விலகிப்போனால் பிரயாணம் செய்யும் அனைவருக்கும் கஷ்ட்டம் ஆகிவிடும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

எழுத்தாளரின் பேனா முனை புனிதமானது என்றார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். சுயநலன்களுக்காக பிடிவாதம் பிடிப்பதை யாரும் ஒருபோதும் வரவேற்க மாட்டார்கள். எண்ணிப்பாருங்கள்.

குறிப்பு - எழுதுவது என்பது இந்தியத்திருநாட்டில் சுதந்திரமானது, அதற்காக நல்ல திட்டங்களை முறியடிக்க கூட்டங்கள் கூட்டுவதும், பிறர் மனதை புண்படுத்தும் வார்த்தைகள் எழுதாதவன் தான் சிறந்த எழுத்தாளராக மதிக்கப்படுவான்.

எழுத்தாளர், பொதுசேவை,
ALS மாமா,
K.T.M தெரு ,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்......!
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [28 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16318

அஸ்ஸலாமு அலைக்கும். பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை அமைய மாவட்ட ஆட்சியர் உத்தரவு. காயலுக்கும், ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு நல்ல செய்தி. அல்ஹம்துலில்லாஹ். அதே...... சமயம் நமது சகோதரர்களான பெரிய நெசவுத்தெரு மக்களுக்கும் பாதுகாப்பான முறையிலும், நமதூருக்கு பெருமை சேர்க்கும் வன்னமும் கீழ்க்காணும் முறையில் பெரிய நெசவுத்தெருவை அமைத்தால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் எனலாம்.

அன்பின் நகர்மன்ற தலைவர் அவர்களுக்கு......

நெசவு தெருவில் வீடுகளை ஒட்டி கிழக்கு, மேற்கு பாகம்களை ஒரு மீட்டர் அல்லது ஒன்னரை மீட்டர் விட்டு foot path அமைத்து பிள்ளைகள் விளையாட்டை தடுக்கா வன்னம் இடை, இடையே... ரோட்டின் ஓரம் கிரில்கள் அமைத்து பிள்ளைகள் ரோட்டில் இறங்குவதை தடுக்கலாம்.நகர்மன்றத்திற்கு வருமானம் வரும் வன்னம் விளம்பர போடுகளும் அமைக்கலாம். தெரு விளக்குகள் இடையிடையே... நிறுவினாலும்.... காயல் கலை கட்டிவிடும். ஊரின், தெருவின் அழகும் கூடும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by abbas saibudeen (kayalpatnam) [29 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 16346

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த அறிக்கை எப்படி மாற்றம் அடைந்தது .........................கலெக்டர் நேரில் ஆய்வு செய்யும் போது என்னெல்லாம் முடியாதது என்று சொன்னார்களோ.............அதை அப்படியே அவர் அறிக்கையில் முடியும் என்று செய்ய வைத்த விநோதம் வுன்மையாலர்களுக்கு தெரியும்

......................கண்ணை மூடி அறிக்கைக்கு COMMAND எழுதரீர்கள்............கொஞ்சம் கண்ணை தெறந்து அறிக்கையே பார்த்தால் தெரியும் அறிக்கையின் நியாயம் செத்து பொய்களால் வுண்டாகப்பட்டதை அறிவீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வருங்காலம் அநீதி செத்து நீதி ஜெயுக்கும் என்பதை கண்கூடாக காண்பீர்கள் ....................அதற்கு வல்ல ரஹ்மான் துனைநிட்பானாக .ஆமீன் ......................முந்தைய சான்றாக பத்ரு போரை நினைவு கூறுங்கள் .................

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. நீதியா ?
posted by Kaleel Rahman (Chennai) [29 January 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 16359

ஆக்கிரமிப்பு எங்கு இருந்தாலும் அது 'உடனடியாக' அகற்ற படவேண்டும் என்பது தான் நீதி.

தற்போது பயன்படுத்தி வரும் State Highway யில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று "குறி "யிட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தாமல் சில செல்வதர்களின் பண பலத்திற்கு அடிமையாக அல்லது அதனை அப்புற படுத்த "கூறு" இல்லாமல் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய நெசவு தெரு ஆக்கிரமிப்புகளை 'உடனடியாக' அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது "நீதிக்கு" கிடைத்த பெருத்த அவமானம்.

கலீல் ரஹ்மான்
சின்ன நெசவு தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [31 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16396

சகோதரர்களே! அஸ்ஸலாமு ஆலைக்கும் (வரஹ்)

ALS Maama அவர்களுக்கு,

நான் எழுதிய கருத்து எண்: 4ல் மட்டும் குற்றம் கண்டு, மற்றவற்றை விட்டு விட்ட தங்களது பெருந்தன்மையை மதிக்கிறேன். அதே நேரம் நீங்கள் கூறியபடி பேனா முனை கூரியதாதலால், பட்டவர்த்தமாக எழுதினால் யாரையாவது கிழித்துவிடும் என்று எண்ணியே முழு விளக்கத்தையையும் விரிகவாக எழுதவில்லை. இதோ தங்களது கருத்துக்களுக்கு எனது பணிவான பதில்........

(((((((கூளக் கடை பஜார் வழியாக பஸ் போவதால் இந்த பயம் ஏற்ப்படும் என்று கூறிய உங்கள் எண்ணங்கள் சரிதானா? கூளக் கடை பஜார், உங்கள் தெரு போல ஊருக்குள் நல்ல பாதுகாப்பான இடம்தான், உங்களை போல் சிலர் வேறு பாதை வழியாக பேருந்து போக்குவரத்தை எங்கோ திருப்பி விடுவதால் பெரும்பாலும் முஸ்லீம்கள் அல்லாத மக்கள் வாழும் பகுதியாகவும் அதேசமயம் அங்கு நமது வேற்றுமத சகோதரர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளிகள் , மாலை வேலை செய்துவிட்டு இரவில் சீக்கிரமாக தூங்கப்போகும் வழக்கம் உடையவர்கள்.

நம்பகுதி தெருக்களில் இரவு 11 மணி ஆனாலும் ஆள் நடமாட்டம் இருக்கும். புதிய போக்குவரத்து அந்த பாதையில் அமைந்தால் அது உங்களின் நாலாவது கருத்துக்கு ஆபத்தாக அமையாதா ? )))))

கூலக்கடை பஜாரும் பஸ் போக்குவரத்துள்ள ரோடாக மாறினால், டிராபிக் (லோடு இறக்கும் லாரிகளால்) பிரச்சனைகள் வரும், அதனால் டிராபிக் போலீஸ் வரும் – பிறகு போலீஸ் ஸ்டேஷன் வரும் – இப்போது எனது அந்த கருத்தை (கருத்து எண்: 4 – Comment Reference no: 15479) படித்துப் பார்க்கும்படி தங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். (இதற்கு மேல் விளக்கமாக எழுத பொது மேடை இடங்கொடுக்காது – மன்னிக்கவும்) பல கருத்துக்கள் பாய்ண்டுகளாக பிரித்து எழுதியிருந்தாலும் நான் கூற வந்ததின் மொத்த அர்த்தம் ஒன்று தான்.

நகரங்களில் உள்ளவர்கள் கிராமத்தை நோக்கி திரும்ப வரும் காலம் இது. ஆனால் நாமோ நமது அழகான ஊரை நகரமாக்கி (அதன் மூலம் நரகமாக்கி) பார்க்க ஆசைப்படுகிறோம். ஊருக்குள் இருவழி சாலை அமைய பெருவதால் ஏற்படும் நன்மைகளை மட்டுமே பார்க்கின்றீர்கள். ஆனால், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள் இப்போது தெரியாது.

“செருப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று தான். ஆனால் அதனை வீட்டிற்கு வெளியே தான் விட்டு வரவேண்டும். வீட்டிற்கு உள்ளே வந்த பிறகு, வேறு செருப்போ அல்லது வெறும் காலிலோ தான் நடமாடவேண்டும்” - அது போல், மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் போன்றவை ஊருக்கு வெளியே இருப்பதும் ஊருக்கு உள்ளே சிறிய ரக போக்குவரத்தும் தான் நன்மை என்பது எனது கருத்து.

* முதலில் செலவீனம் (ஆட்டோ சார்ஜ்) விஷயத்திற்கு வருவோம்.

ஒவ்வொருத்தரும் தனது வீட்டிற்கு அருகிலேயே பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் போன்றவை இருக்க வேண்டும் என நினைக்க முடியாது என்பதால், எந்த இடத்தில் பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் இருந்தாலும் பாதி மக்கள் ஆட்டோக்கு செலவு செய்து தான் ஆகவேண்டும்.

இப்போது ரெயில்வே ஸ்டேஷன் ஆறுமுகநேரி அருகில் இருப்பதால் ஆட்டோ ஏறி போகிறோம். சரி. பஸ் ஸ்டாண்டு தண்ணீர் தொட்டியின் கீழே தானே இருக்கிறது. காயல்வாசிகள் அனைவரும் நடந்தா வருகிறார்கள். போஸ்டு ஆபீஸில் எறி பஸ் ஸ்டாண்டில் இறங்கும் பெண்களையும் நமது ஊரில் நான் பார்த்திருக்கிறேன். அப்போ, ஆட்டோக்கு செலவு செய்வது தூரம் என்பதால் அல்ல. வசதியை பொறுத்து தான் இல்லையா?

* பாதுகாப்பு விஷயத்திற்கு வருவோம் பெரிய தெருவாசிகள் கூறிய (KMT to VISHALATCHI AMMAN ST) புதிய வழிதடத்தில் பஸ் போனால் பாதுகாப்பு இருக்காது என்று சிலர் கூறுகிறார்கள். நான் கேட்பது என்னவென்றால்,
ஆறுமுகநேரி – பஸ்ஸ்டாண்டு – விசாலாட்சி அம்மன் தெரு – கே.எம்.டி – திருச்செந்தூர்
(அல்லது)
திருச்செந்தூர் – கே.எம்.டி – விசாலாட்சி அம்மன் தெரு - பஸ்ஸ்டாண்டு - ஆறுமுகநேரி
இந்த மார்க்கமாக தான் பஸ் போகப்போகிறது. இப்போது இருப்பது போல் பஸ்ஸ்டாண்டு மற்றும் கே.எம்.டி இரண்டும் பஸ் நிற்கும் இடம். இதில் பாதுகாப்பு எங்கே வந்தது? ஒரு வேளை ஓடும் பேருந்தில் பாதுகாப்பு இருக்காது என்று நினைகின்றீர்களா? அப்படி என்றால் திருச்செந்தூரிலிருந்து வரும் போதோ...... ஆறுமுகநேரியிலிருந்து வரும் போதோ...... முழுவதும் ஆள் நடமாட்டம் உள்ள இடங்கள் வழியாகத்தான் பஸ் வருகிறதா? இரவில் நேரம் தவறி வருபவர்களுக்கான பாதுகாப்பைப் பற்றி யோசிக்கும் எனது அன்பு சகோதரர்களே! தாமதமாக எத்தனை ஆயிரம் பேர் வருகிறார்கள் என்பதையும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள். அப்படி வருபவர்களுக்கு நமது போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பில் மட்டும் பலமான பாதுகாப்பு இருக்கிறதா?

இப்போது கலெக்டரும் நாங்கள் கூறிய “புதிய வழித்தடத்தில் பஸ் விடுவதைப் பற்றி ஆராய்ந்து பின்னர் முடிவு எடுக்கப்பட வேண்டும்” – என்று தான் அறிவித்துள்ளார். பெரிய நெசவு தெரு வழியாக பஸ் போக்குவரத்து வருங்காலத்தில் இடஞ்சலாக இருக்கும் என்பதை தானே நாங்களும் கூறினோம். பின்னர் எடுக்கப் போகும் முடிவை இப்போதே எடுத்தால் என்ன? பெரிய தெருவாசிகள் கண்மூடித்தனமாக ஒரு-வழி போக்குவரத்தை எதிர்க்கவில்லை என்பதை சகோதரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பஸ் போக்குவரத்தால் கே.டி.எம் தெருவாசிகள் படும் அவஸ்தைகளை கேட்டு/பார்த்து புரிந்துக் கொண்டதால் தான் எதிர்க்கின்றோம். அவர்களையும் காயல் மாநகரத்திற்காக நீங்கள் மென்மேலும் விட்டு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை. நமது ஊர்வழியாக ஹை-வேஸ் ரோடு இருப்பதை விட ஊருக்கு வெளியே இருப்பது தான் சிறந்தது என்றுதான் கூறுகிறோம்.

நமது ஊரை விட பெரிய ஊர்களில் கூட பஸ் போக்குவரத்து வெளியே உள்ளது. அந்த ஊர் மக்கள் பயத்திலோ, செலவாகும் என்றோ கவலைபடுவதாக அறியப்படவில்லை. நமது ஊரிலாவது தனியே பெண்கள் இரவில் நடமாடுவதில்லை. ஆனால், அந்த ஊர்களில் அப்படி இல்லை.

அடைக்கலாபுரம் வழியாக பஸ் போவதற்கு இட நெருக்கடி மட்டுமே காரணமில்லை. நான் பாண்டிச்சேரியிலிருந்து பஸ் ஏறினால் காயல்பட்டிணத்திற்கு டிக்கெட் தருவதில்லை. “பஸ் அடைக்கலாபுரம் வழியாகத் தான் போகும். ஆகவே ஆறுமுகநேரிலோ அல்லது திருச்செந்தூரிலோ இறங்கிக் கொள்” - என்று பஸ்காரர்கள் சொல்கிறார்கள் (ரூட் ஷீட்படி காயல்பட்டிணம் தான் வழி என்பது வேறவிஷயம்). காலை 5-6 மணிக்கு என்னங்க டிராபிக் இருக்கப்போகுது?. இப்படி பல உதாரணத்தை என்னால் கொடுக்க முடியும்.

நமது ஊரை போன்ற CLOSED COMMUNITY ல், ஊருக்கு வெளியே கனரக போக்குவரத்தும், ஊருக்கு ஊள்ளே சிறிய ரக வாகனப் போக்குவரத்தும் இருப்பது தான் நன்மை என்பதை சகோதரர்களே தயவு செய்துப் புரிந்துக் கொள்ளுங்கள். இப்போது கலெக்டர் ஆணை பிறப்பித்த பின்னரும் கூட இது தான் எங்களது நிலைப்பாடு.

மேலும், இது விஷயமாக பேசிய அனைத்து சகோதரர்களும், பெரிய நெசவு தெருவாசிகள் எழுப்பிய ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை மிகவும் பெர்சனலாக எடுத்துக்கொண்டு அர்ச்சனை செய்தார்கள். “திருடர்களை பிடித்து, தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுவாக கூறினால், திருடர்கள் மட்டுமே கோபப்பட வேண்டும். திருடர் அல்லாதவர்களும் ஏன் கோபப்பட்டார்கள்?

ஊருக்கு நல்லது என்று வரும்போது, வீண் பிடிவாதம் பிடிக்க கூடாது – என்பது பலரது கருத்து. நன்று. ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அந்த கருத்து தவறுதலாக இருந்துவிட்டால்?... அப்போதும் நான் ஊர் நன்மையைக் கருதி வாய் மூடி இருக்க வேண்டுமா?. ஊருக்குள் இருவழி/ஒருவழி – எந்த வழி இருந்தாலும் லாபத்தைவிட நஷ்டம் அதிகம் என்பதும் என் கருத்து. என்னுடைய வீட்டிற்கு/குடும்பத்திற்கு பாதிப்பு என்றால், நான் தான் குரல் கொடுக்க வேண்டும். வேறு யாரையாவது சத்தம் போடச் சொல்லமுடியுமா? ஆகவே தான் நாங்கள் எங்களது கருத்தை பதிவு செய்தோம்.

அப்பப்பா! எவ்வளவு அர்ச்சனைகள். இப்போது இங்கு எழுதியுள்ள அனைவரும் மிகவும் சாந்தமாக பேசியிருப்பதையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்போது எல்லோருமே பெரிய தெருவாசிகளை சமாதானப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். வெற்றி/தோல்வியை பற்றி நான் பேசவில்லை. மனித மனம் தனக்கு ஒன்று கிடைக்கும் வரை மட்டுமே அலைப்பாய்கிறது. கிடைத்து விட்டாலோ அமைதி அடைந்துவிடுகிறது. வஸ்ஸலாம்.

சினேகத்துடன்
சிராஜூதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by seyed mohamed (ksa) [01 February 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16407

அது போல், மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் போன்றவை ஊருக்கு வெளியே இருப்பதும் ஊருக்கு உள்ளே சிறிய ரக போக்குவரத்தும் தான் நன்மை என்பது எனது கருத்து- நண்பர் சிராஜ் கருத்து.

இப்ப இருக்கும் மெயின் ரோட்டை எப்படி வெளில தூக்கி வைக்க முடியும். நடக்ககூடியத்தை பேசினால் நல்ல இருக்கும். ஹாஜி அப்பா, மெயின் ரோடு, ktm தெருவில் இத்தனை காலம் கனரக வண்டி, பஸ்கள் போய் வரும்போது, என்றாவது வருத்தம் தெரிவித்து இருப்பீர்களா? இப்ப உங்களுக்கு என்று வரும்போது ஏன் எத்தனை விவாதம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by MAHMOOD HASAN (mammaash) (QATAR) [01 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16408

அல்ஹம்துலில்லாஹ்... அருமையான முடிவு.......

ம்ம்ம் ...சிராஜ் ...இதை பற்றி பல முறை விவாதித்து விட்டோம் ....இத்தனை வருடமாக ஊருக்குள்ள ஒரே தெருவுக்குள்ள வாகனம் போகும்போது திறக்காத கண்கள் இப்போது உங்கள் தெரு உபயோகம் படுத்தப்படும் என்பது தெரிந்ததும் திறந்திருப்பது சரிதான்!

இதையே நீங்கள் அனைவரும் ஒரு வழி பாதை பற்றி பேசும் முன்பே சொல்லி இருந்தால் ஊரின் நன்மைக்காக என்று கூறி இருக்கலாம்... இப்போது ஊருக்கு வெளியே தான் எல்லாம் வேண்டு என்று கூறும் selfish தனத்தை என்னவென்று கூறுவது!!!

மேலும் யாருக்கும் யாரையும் சமாதானபடுத்த அவசியம் இல்லை .எது சரியோ அது நடந்து இருக்கிறது . இப்போதாவது வீன் வாதம் பேசாமல் ... எல்லோருக்கும் நன்மையான, நமது ஊருக்கு தேவையான, பாதுகாப்பான, நடை முறைக்கு ஏற்ற மற்றும் சாத்தியமான வழி இதுதான் என்பது அனைவரும் உணர்ந்தால் சரி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ...
posted by MOHAMMED ADAM SULTAN (kayal patnam) [01 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16410

சகோதரர் சிராஜுதீன் அவர்கள் உதாரண வார்த்தை பிரயோகம்,சற்று வருத்தத்தை கொடுக்கிறது.

பொதுவாக திருடாதீர்கள் என்று ஒரவர் சொன்னால் யாருக்கும் கோபவம் வராது. சிராஜுதீன் கூற்றுப்படிஒருவர் பெயரை குறிப்பிட்டால் உதாரணமாக சிராஜுதீன் திருடன் என்று சொன்னால்,சிராசுதீன்க்கு கோபம் வருமா? வாராதா?அப்படி கோபம் வரவில்லை என்றால் அவன் உணர்ச்சி இல்லாத மானங்கெட்டவன் அல்லது அவன் உண்மையிலேயே திருடனாக இருக்கவேண்டும்.

பெரிய நெசவு ஜமாத்தார்கள், ஊரில் பொதுவாக ஆக்கிரமிப்பு இருக்கிறது என்று தீர்மானம் போடவில்லை. குறிப்பாக KTM தெருவை குறித்து அது ஆக்ரமிப்பில் உள்ளது என்று பல மாதங்களுக்கு முன்னாலேயே தீர்மானம் போட்டிருக்கிறார்கள். தீர்மான நகல் தேவை என்றால் உடனே கிடைக்கும்.

ஆகவே சிராஜுதீன்அவர்க,ளே ஒட்டு மொத்த ஊர்மக்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்களின் வழியை பின்பற்றுங்கள் . ஊர்மக்கள் அனைவருக்கும் தாங்கள் உபதேசம் செய்ய முன் வரும்பொழுது,உங்களை நீங்களே சற்று உரசி பாருங்கள் .உண்மை உங்கள் உள்ளத்தில் பள்ளத்தில் பதுங்கி இருக்கிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved